பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.5

மார்ட்டின் லிங்ஸ் என்பார், கீழை நாடுகளையும் மேலை நாடு களையும் சூஃபி நெறியே இணைக்கின்றது” எனக் கூறியுள்ளார். மொகலாயப் பேரரசர் ஷாஜஹான் மைந்தர் தாராஷிகோ, "சூஃபி நெறியும் அத்வைத வேதாந்தமும் ஒன்றே என உணர்த்தியுள்ளார்.

'இதயத் தூய்மை ஒருவரைச் சூஃபியாக்குகின்றது என்ருர் சையது நஜீப் அல் அத்தாஸ். ,

'திருக்குர்ஆனின் தீாக்கமான மாணவர்களே சூஃபிகள்’ என் பது நிக்ஸன் சருத்து. 'திருக்குர்ஆனிலிருந்துதான் இஸ்லாமிய மெய்ஞ்ஞான நெறியாம் சூஃபி நெறி முகிழ்த்து எழுகின்றது’ என்பார் மசிக்னன்.

இவ்வாருக, இஸ்லாமியத் திருமறையாம் திருக்குர்ஆனைப் போற்றுவது சூஃபி நெறியின் தலையாய கொள்கையாகும். திருக்குர்ஆன் சூஃபி தத்துவத்திற்குரிய அடிப்படைக் கொள்கை களைக் கொண்டிலங்குகின்றது. அக்கொள்கைளைப் பிரதிபலிக்கும் வசனங்களிற் சில:

  • ஆதியுமவனே; அந்தமுமவனே தோற்றுவதுமவனே: மறைந்திருப்பது மவனே; அவன் எல்லாப் பொருட்களையும் நன் கறிந்தோன’.

"இறைவன் மண்ணினுடையவும் விண்ணினுடையவும் ஒளி யாய் இருக்கின்ருன்’.

"நான் மனிதனை உருவாக்கி அதில் எனது உயிரைப் புகுத்தி னேன்?.

"இறைவன் எவனுக்கு ஒளியூட்டவில்லையோ அவனுக்கு எவ் வித ஒளியும் கிடைக்காது’.

திருக்குர்ஆனுக்கு ஏற்பத் தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட நபிகள் நாயகம (ஸல்) அவர்கள் கூற்றில் சூஃபி நெறிக் கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

'இறைவன் அருளினுன்: என் மீது நம்பிக்கை வைத்தோரின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன். நான் அவருடன் மிக நெருங்கி அவரை நினைத்தவராக இருப்பேன்."

"இறைவன் திருவுள்ளமானன்: நான் மறைந்த புதையலாக இருந்தேன் அறியப்பட விரும்பினேன்; எனவே மனிதனைப் படைத்தேன்." I 0.