பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

இப் பெரியாார் பிறந்த ஆண்டு தெளிவாகத் தெரியவில்லை. காயல்பட்டினத்தில் பிறந்து கீழக்கரையில் அடங்கியிருக்கும் மெய்ஞ்ஞானி சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் சமகாலத் தவா மெய்ஞ்ஞானி பீர்முகம்மது அப்பா அவர்கள் என அறிய முடிகினறது சதக்கத்துல்லாஹ அப்பா அவர்கள் தம்மை வாழ்த்திய செய்தியைப் பீர்முகம்மது அப்பா அவர்கள்,

'மனமது மகிழ அறிவையு மறிந்து வழுத்தினர் சதக்கத்துல்லாவே.'

எனப் பாடலொன்றில் குறிப்பிட்டுள்ளார். இரு ஞானியரும் சந்தித்த செய்தியை ஞானமணிமாலை உரையாசிரியர் எம். ஏ நெய்ஞ முகம்மது பாவலர் குறிப்பிட்டுள்ளார்கள். இச்செய்தியை மு, செ. மு. முகம்மது அப்துல் காதிர் என்பாரும் உறுதிப் படுத்துகின்ருர். இந்தியாவை ஆண்ட மொகலாயப் பேரரசர் அவ்ரங்கசீப்பின் காலத்தவரவார் ஞானி சதக்கத்துல்லாஹ. அவ்ரங்கசீப் கி. பி. 1658 முதல் 1707 வரை ஆட்சிபுரிந்துள்ளார். எனவே பீர்முகம்மது அப்பா அவர்கள கி. பி. பதினேழாம் நூற்ருண்டை ஒட்டி வாழ்ந்தவர் எனத் தெரியலாம். பீர்முகம்மது அப்பா அவர்கள் திரு நெறி நீதம் என்னும் நூலே ஹிஜ்ரியாண்டு 10:22இல் பாடியதாகக் கூறியுள்ளார்கள். அக்கூற்று,

"குருகபி ஹிஜ்ரத்தாகி குவலயத் தாயி ரத்தின் இருபத்தி ரெண்டாமாண்டில் இயம்பிடும் ரபியு லாகிர் கருமமென் றிருப தன்று காரண வெள்ளி காளில் திருைெறி தேம் பாடத் திருவருண பெருகத்தானே."

எனும் பாடலில் இடம் பெற்றுள்ளது. இச் செய்தியும் மேற்கண் காலவரையறையை அரண் செய்ய உதவுகின்றது.

பீர்முகம்மது அப்பா அவர்கள் பிஞ்சு மனப் பிள்ளைப் பருவத் திலேயே பெற்ருேரையும் பிறந்த பெரும்பதி தென்காசியையும் பிரிந்து சென்ருர்கள். அவர்கள் வாழ்நாளில் அதிக நாட்களேஏறத்தாழத் தொண்ணுாற்றைந்தாண்டுகளே காடுகளிலும் மலை முழைகளிலும் தங்கிச் செலவிட்டதாக தெரிய வருகின்றது. முன்னைய திருவிதாங்கூர் அரசின் மலைப் பகுதிகளிலும் அவர்கள் தங்கி ஆன்மீகப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்கள். யானைமலைப் பகுதியில் பதினைந்தாண்டுகள் அவர்கள் நிட்டையில் ஆழ்த்திருந் திருந்த பகுதிதான் இன்று பீர்மேடு (Peermade) என வழங்கப்

படுகின்றது.