பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii

இந்தப் பெரிய பட்டியலிலும் தமிழில் இஸ்லாமிய மெய்ஞ் ஞானப் பாடல்களைத் தந்துள்ள பலர் விடுபட்டுள்ளனர். தமிழில் இலக்கியம் படைத்த இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் எத்தனைபேர் இலைமறை காய்களாகி உள்ளனர் என்பதை இத்துறையில் ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும்வரை கூறிவிடமுடியாது.

தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றபின்னர் எமது கைக்கு எட்டிய மெய்ஞ் ஞான இலக்கியங்கள் பற்றி ஈண்டு குறிப்பிடுவது பொருத்த மானது என்று நினைக்கிருேம. அத்தகைய மெய்ஞ்ஞானிகளுள் ஒருவர் கலிபத்து செய்கு ஷாஹுல் ஹமீது என்பவரும் ஒருவர் ஆவார். இவர் கலிபத்து செய்கு ஷாஹூல் ஹமீது அப்பா நாயகம் எனவும் அழைக்கப்பட்டார். இம்மெய்ஞ்ஞானி பாடிய வற்றுள் தற்பொழுது எமக்குக் கிடைத்துள்ளவை ஞானக் கமல மணிமாலை, ஞான அலங்காரம், ஞான அற்புதம், ஞான வேதாந்தம் என்னும் பிரிவுகளில் இடம்பெற்றுள்ள பாடல்களே யாகும். இவற்றையும் பல்வேறு பிரிவுகளாக கலிபத்து செய்கு ஷாஹ-ல் ஹமீது அப்பா நாயகம் அவர்கள் வகுத்துள்ளார்கள். ஞான அலங்காரம் என்னும் பிரிவில்,

பூரண மெய்ஞ்ஞானம் நூறு, சம்பூர்ண ஆசிரியவிருத்தம், சச்சிதானநத ஆசிரியவிருத்தம் மெய்ஞ்ஞான ஆனந்தக்களிப்பு ஞானச்சர நூல் ஞானககண் மணிக்கும்மி மாசிலாமணிப் பதிகம் மெய்ஞ்ஞான முச்சுடர் விளக்கம் எக்காலக் கண்ணிகள் எந்நாள் கண்ணிகள் ஞானத்திறவுப் பதிகம் மெய்ஞ்ஞான தீபம் ஞானத்திருநடி

ஞானத்தெளிவு மெய்ஞ்ஞான அடைக்கலம்

என்பன இடம்பெற்றுள்ளன. அதேபோன்று ஞான அற்புதம் எ னும் பிரிவில் இடம் பெற்றுள்ளவை,