பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 52

யாப்புக்களாலான பாடல்கள் முப்பத்தெட்டனையும் கொண்டி லங்கும் ஞானப்பூட்டு ஞானச் செல்வங்களைத் தன்னுளயூட்டி வைத்திருக்கிறது. காவலன் இறைவனிடம் காப்பினநாடும் அப்பா அவர்களின் கருணை உள்ளத்தை,

'அஞ்சாமல் நின்றுள மைம்பூத மஞ்சு மறையி னின்றே ஒஞ்சாம லோடிய வாசியைக் கண்டுள முடகலந்து மிஞ்சாமல் நின்றவோர் மெய்வழி கண்டபின் மேலவன்றன் எண்சணுக்குள நின்றெனக் காத்தருளுமென கண்மணியே' ('9)

என ஞானப்பூட்டுப் பாடல் நவிலுகின்றது. இறைவனின் பெருமையை இநநூலில் ஏக ஆதி சோதி நீதியே”, “ஆளுமிறை யோனே’ ஏட்டிலடங்காப் பொருளே’, ‘கண்மணியே மனை வனே', 'தவ்வை பிதாவில்லாத தானவனே, 'ஏகா’, அரசர் கோவே', 'இணையொன்றில்லாத இறையோனே' எவ்றெல்லாம் பாடிச் சிறபபிக்கினருர்கள். பீரப்பா அவர்கள், சுழிமுனைவாசியைக் 'குழிகளில நிலைபெறச் செய்யும் பீரப்பா அவர்கள் முயற்சியை முப்பத்தெட்டுப் பாடல்களில் ஐம்பத்து மூன்று இடங்களில் காண முடிகின்றது.

ஞானப் புகழ்ச்சி

'ஆருறுக்கப்பால்’ எனத் தொடங்கி "அறுஹமர் ருஹிமீன்’ என முடியும் ஞானப் புகழ்சசியில் அறுநூற்று எண்பத்து ஏழு பாடல்கள் அமைந்துளளன. நேரிசை வெண்பா, பஃருெடை வெண்பா, வெளிவிருத்தம், ஆசிரிய விருத்தம், கலித்துறை, கலிவிருத்தம், கொச்சகக் கலிப்பா, வஞ்சி விருத்தம், கண்ணிகள் முதலிய யாப்பு முறைகள் இநநூலில் இயன்றுவரக் காணலாம். நூலின பெயரை,

"புகழ்ச்சி துஆஅடியேன் புகலுதற்கு நீ மனதுள் மகிழ்ச்சி தருவாயே மகிழ்ந்து'

எனப் பீரப்பா அவர்களே நூலின் கண் நினைவுபடுத்திக் காட்டு கின் ருர்கள்.

ஞானப் புகழ்ச்சிப் பாடல்கள் தொடக்கத்திலிருநது இறுதி வரை இறைஞ்சுதல் (து.ஆ) பாங்கில் அமைந்திருப்பதைக் காண இயலுகின்றது. யாப்பு அவையடக்கம், அடைக்கலம், சரணம. துஆ இரப்பு எனச் செல்லும் இந்நூலின் பகுதிகள், பக்தி நலங் கனியும் திறத்தன. இந்நூலின் 43-வது பாடலிலிருநது 157-வது