பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

இறையை அறிவது மெப்படிச் சொல்லடி சிங்கி-அது இறையெங்கு நின்றிடுந் தன்கிளை வாகுமே சிங்கா! தன்னுள் விளங்கும் தவமென்ன சொல்லடி சிங்கி!-அது தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா! என்ன விதமாகத் தன்னை மறப்பது சிங்கி!-அது ஒற்றைப் பொருந்தி நடுங்கி யிருப்பது சிங்கா! என்ன விதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி-அது எல்லா மறந்து மிருளாயிருப்பது சிங்கா!

திருமெய்ஞ்ஞானச் சரநூல்

'பொன்ஞன மெய்ஞ்ஞான சரநூ லென்னும் புகழ் பெரிய சாஸ்திரத்தின் புதுமைத்தன்னை'

கன்னல் ரகச் செந்தமிழில் கவிதையில் சொல்லுற்ற பீரப்பா வின் படைப்பே திருமெய்ஞ்ஞானச் சரநூல். ஆசிரிய விருத்தங் கள் முப்பதாலானது இந்நூல். இந்நூலில் பீரப்பாவின் கவிதை யுள்ளத்தையும், கணித ஆற்றலையும், உடற்கூற்று வவ்லமையை யும், உளவியல் சிறப்பையும் உணர முடிகின்றது. சரநூலின் தத்துவத்தை மேலோட்டமாகப் பார்க்காமல் நுட்பமாயுணர துவலும் ஆசிரியர் கூற்றை நினைவுபடுத்துகிருேம் :

'உலகுவர்க்குச் சஏநூலை ஒழிப்பில் லாமல்

ஒதும்வகை யோதனவே உவந்து கேளாய் கிலைகருமம் நிலையாது நெறியாய்க் கூறும்

நீடுழி வாழ்வரசு நிலைப்பதோடு விலங்குவதும் வருங்காலஞ் செய்கா லங்கள் வியனுறவே நிகழ்காலம் மரண காலம் கலைபெரிய இந்நூலின கார ணத்தின்

காட்சிதனைக் கருதிப்பார் காணும் தானே.”

ஞான ஆனந்தக் களிப்பு

இந்நூல் 16 பாடல்களின் தொகுப்பு: இறைவனக் கண்டு

கொண்டேனே என்னும் பொதுக்கருத்து பாடல்களில் மேவிவரக்

காணலாம். சிறந்த பண் அமைந்த இந்நூலின் சீரிய பாட

லொன்று :

'கொள்ளைக் குதிரைகள் கோடி-அவன்

கோட்டை யழிக்க வருகுமே ஓடி

வெள்ளைக் குதிரை மேல் ஏறி-வீதி

தப்பாமற் சுற்றிப் பரியை கிறுத்திச்