பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 68

இறைச் சன்னிதானத்து ஒப்படைத்து தன்னையே ஐக்கியப்படுத் திக் கொள்ளும் முனைப்பை, முட்டை-கோழி எனும் குறி யீட்டால் மஸ்தான் சாகிப் உணர்த்துகிருர், சேய் வாய் மடுக்கச் சுரக்கும் தாய்ப்பாலென எணண எண்ண துலங்கும் பொருள் வளம்.

'மரணம் வருவதற்கு முன்னலே மரணித்து விடுங்கள்.' என்பது நபிமொழி. இதன் பொருள் நம்முடைய நிலையற்ற உள்ளமையை அழித்து நிரந்தரம் இலங்கும் இறைவனில் இணைந்து நிலைபெறுவதாகும். மஸ்தான் சாகிப் பாடுகிருர்:

"நான் சாமுன் கான்சாவ நாடினேன், கான் சாமுன் கான்சாவ அருள்புரியவும்'

இப்பாடலில் ஒருபுறம் நபிகள் நாயகத்தின் பொன்மொழி மின்னுகிறது. மறுபுறமோ செருக்கைத் தூண்டும் "நான்' அகந்தைச் செத்துப்போக அருள்புரியவும் என்னும் கருத்துரைப் பளிச்சிடுகிறது, இறுதியாக மஸ்தான் சாகிப் நமககெல்லாம் விடுக்கும் அழைப்பினைக் கேட்போம்:

"ஐயன் குணங்குடியானேயன்றி” வேறு துணையில்லை, எனவே,

'ப்ோவோம் குணங்குடிக் கெலலோரும்-புறப்படுங்கள் போவோம் குணங்குடிக் கெல்லோரும.'

எதற்கு? ஞானப்பாலை அருந்தி உள்ளொலி பெறுவதற்காக. இங்கு குணங்குடி என்ற தொடரால் நற்குணங்கள் எல்லாம் உறையும் ஒன்றை உருவகப்படுத்தி அதற்கு உரித்தான குருநாத ரைச் சுட்டுகிருர், போவோம் குணங்குடிக்கு என்பது சுவர்க்க பதியை-மோட்சத்தை-நோக்கி நடைபோடுவோம் என்று பொருள்தரும். இவ்வாருக நாம் வாழ்வில் கடைத்தேற கடைப் பிடிக்க வேண்டிய பல்வேறு அகமிய உண்மைகளையும், ஞானத் தின் உட்கருத்துக்களையும் இலைமறை காயாக மக்கள் மத்தியிலே வைத்து மங்காப்புகழ் பெற்ற மாமேதை மஸ்தான் சாகிப். துளசிச் செடியின் வேர், தண்டு, கிளை, இலை, தளிர், பூ எல்லாம் மணப்பது போன்று, அவரின் பாடல்கள் அனைத்தும் பல்வகை மணத்தை அள்ளிக் கொடுப்பவை,