பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞான நோக்கில் மெய்ஞ்ஞானியர்

எம். ஏ. ஹைதர் அலி, பி.ஏ.

விஞஞானமும் மெய்ஞ்ஞானமும் நேர் எதிரெதிர் திசையை நோக்கிய இரு நோக்குகள் என்பதே உலகில் பொதுவாக உணரப் பட்டிருக்கிற கருத்தாகும்.

உலகின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஞானம் என்பது ஒரே துறையாகவே இருந்து வந்திருக்கிறது. புலன் ஐநதாலும் மனிதன் பிரபஞ்சத்தை உணர முற்படுகிருன். புலன் வழியே கிடைக்கினற ஞானத்தை அல்லது அறிவை வரிசைப் படுத்தி தர்க்க ரீதியாகப் புத்தியைக் கொண்டு முடிவை எடுக்கிருன்,

வேறெந்த ஜீவனுக்கும் இல்லாத சிறப்பு மனிதனிடத்தில் இருக்கிறதென்ருல இது புத்தி என்ற இந்த சிறப்பு தான். இதை ஆருவது அறிவு எனகிருர்கள். மனிதனை "அறிவு ஜீவி” எனறு அடைமொழி கொடுத்து அழைக்கின் ருர்கள்.

புலனறிவைக கொண்டு உணர்ந்ததை அடிப்படையாக வைதது எடுக்கின்ற முடிவுகள் மனத்திலேயே அலலது புத்தி யிலேயே போடப்படுகிற கணக்காக இருந்துவிடாமல் அதே புலனகளைப் பயன்படுததி ஒனறுக்குப் பலமுறையாக ஆராய்நது முடிவெடுக்கப் படவேண்டுமென்பது தான் விஞ்ஞானத்தின் சிறப்பாகும்.

முறகாலத்தில் அகன்ற நெற்றியை உடையவன் புத்தி சாலி” எனற ஒரு கருத்து இருந்தது. அதேபோல் கூர் மூக்கை உடையவன் கலே நோக்கமுடையவன் என்றும் கூறுவதுண்டு.

சில அறிஞர்கள் அகல நெற்றியை உடையவர்களாக இருந்

தாாகள்; சில உலகறிநத கலைஞர்கள் கூர் மூக்கை உடையவர்

களாக இருந்தார்கள் என்பதால் அகல நெற்றியை உடையவர்

களெல்லாம் அறிவாளிகள்; கூர்மூக்கை உடையவர்களெல்லாம்

கலைஞர்கள் எனறு ஒட்டு மொத்தமாக சொல்லி விடுவது தவறு

வி 'தின் கொள்கை,