பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணங்குடியார்

==E#5- ար 咒 سمسم

கவிக்கோ எஸ். அப்துல் ரகுமான்

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களுள் தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் குணங்குடியார் எனப்படும் மஸ்தான் சாகிபு, அவருடைய 'வித்தையில் தோழ’ரான புலவர் நாயகம் சேகளுப் புலவர் குணங்குடியார் திருப்பாடல் திரட்டுக்குப் பாடி யளித்த வாயுறை வாழ்த்"தில் குணங்குடியாரின் வாழ்க்கைக் குறிப்புக்களைத் தந்துளளார். செவிவழிச் செய்திகளிலிருந்தும் குணங்குடியாரைப் பற்றிய சில குறிப்புகள் கிடைக்கின்றன.

இராமநாதபுரம் மாவட்டம தொண்டிக்கு அருகில் உள்ள குணங்குடி என்னும் ஊரில நெய்ளு முஹமமது, பாத்திமா என்பவர்களின் புதல்வராய் ஹிஜ்ரி 1207 (கி. பி. 1788) ஆம் ஆண்டில் பிறந்தவர் குணங்குடியார். பெருமாளுர் முஹம்மது(சல்) அவர்கள் அருளிய ஒளியத்துக்கள் (அறிவுரைகள்) அனைத் தையும் திரட்டிப் பொன்னரியா மாலை' என்னும் நூல் பாடிய மதுரை மின்ன நூறுத்தீன் மரபில் வந்தவர். அன்னை பாத்தி மாவின் தந்தைககுத் தந்தையாாமீது குணங்குடியார் பாடி யிருக்கும் அரபு இரங்கற் பாவின் 'வ நிஸ்பத ஹாதா ஷைகி நஸ்ப முஹம்மதி' என்ற வரியிலிருந்து அவர் வள்ளல் நபி (சல) வழி வந்தவர் என்று தெரிகிறது.

குணங்குடியாருககுப் பெற்ருேர் குட்டிய பெயர் சுல்தான் அப்துல் காதிர். பின்னர் மஸ்தான் சாகிபு, மஸ்தான் சாமி, குணங்குடியார், 'தொண்டியார்’, ‘ஆரிபுயிலலா", "ஒலியுல்லா என்று பல சிறப்புப் பெயர்களால் மக்கள் அவரைக் குறிக்கலாயினர்.

இளமை முதற்கொண்டே உலகியல் வாழ்வில் ஈடுபாடு குறைவாகக் கொணடிருந்த குணங்குடியார், தம்முடைய பதினேழாவது வயதில அவருக்கென உறுதிசெயது வைத்திருந்த அவருடைய தாய் மாமன் கட்டை சாஹிபு என்பாரின் புதல்வி மைமூன் என்பவரைத் திருமணம செய்து கொள்ள மறுத்துத் துறவு நெறியில் ஈடுபடத் தொடங்கினர். கீழக்கரை சென்று அங்கே செய்கபதுல் காதிரி லெப்பை ஆலிம என்பாரிடம் அரபிக் கல்வி பயினருர். பின்னா திருச்சிராப்பள்ளி செனறு அங்கிருந்த ஞானி மெளலவி ஷாம சாஹிபு என்பாரிடம் தீட்சை பெற்றுக் கடுந்துறவு பூண்டார். பகலெல்லாம் தோன்பும் இரவெல்லாம் தொழுகையுமாக அவருடைய் நாட்கள் கழிந்தன. இக்கால