பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இறைவனுடைய நாமங்களாக அரபியில் வழங்கும் அழகிய 99 நாமங்களுள் ஹாதி” எனபதும் ஒன்று இதற்கு வழி காட்டி’ என்று பொருள். இறைவனின் வழிகாட்டுதல இரு வகைப்படும். தேனீக்குக் கூடுகட்டத் தெரிவது போன்று எல்லா உயிரினங்களுக்குள்ளும் அமைந்திருக்கும் வழிகாட்டுகல் தக்வீனி' எனப்படும். இரண்டாவது வகை தூதர்கள் வாயிலாக வேதங் களை வெளிப்படுத்தி மாந்தர்ககு நன்னெறி காட்டுவது. இது 'தஷ்ரீயி’ எனப்படும்.

'சூஃபித்துவத்தில் ஆன்மீக வழிகாட்டியாகிய குருவின் பணி தூதர்மணி முகம்மது (சல்) அவர்கள் மீது இறைவன் சொரிந்த அருளை பாரம்பரியச் சொத்தாகப் பெற்று அவ்வருள் துணை கொண்டு தீட்சை பெற்ருரைத் தெய்வீக வெளிப்பாடுகளின் வழியே நேர் நெறியில் பயணம் செய்யச் செய்து இறைவனை அடைய வழிகாட்டுதலாகும.”*

'இறைவனே அவனுக்கு (சூஃபிககு) குரு; வழிகாட்டி’ என்பர் குல்ஷனே-ராஸ்’ என்ற நூலில் ஷபிஸ்தாரி என்பார். எனவே இறைவனே குரு வாயிலாக உணர்த்துகிருன் என்பதே சூஃபிகளின் கொள்கை.

"அருவாகி உருவாகி அருவுருவ மற்ற அறி வாதார மோனமாகி தந்தைதா யாகி அருள் தந்தகுரு ஆகிஎன் தனனுயிர்க் குயிருமாகி'

என்று இக்கருத்தைப் பாடுகிருர் குணங்குடியார்,

'ஷைகுக்கு (குருவுக்கு) கெளவரம் அளிப்பது அல்லாஹ் வுக்கு கெளரவம் தருவதாகும். ஷைகுககு உரிய உரிமைசள் அல்லாஹ்விற்கு உரிய உரிமைகளாம்' என்று புதுாஹாதுல் மககிய்யா' என்ற நூல் குறிப்பிடுகிறது. இநநெறிப்படியே தம முன்னிலைக் குருவாகிய முகியித்தீன் ஆண்டகையை சாட்சாதி ஈசுர சொரூபமே. (நியமநிலை-6) என்பா குணங்குடியார் மேலும் ஆனந்தப் பத்தின இறுதிக் குறிப்பிலும் குருபர ஒருபரகைக் கொண்டாடித் தோத்திரஞ செய்தது' என்று கூறுவதையும் இம்முறைப்படியே பொருள் கொள ள வேணடும்.

சூஃபித்துவ அவதாரக் கோட்பாடு

பரம்பொருளிலிருந்து படைப்புக்கள் உருவாகி அமைந்த

நிலையை சூஃபித்துவம் அவதாரம் (தனஸ்ஸுலாத்) என்று கூறும். ' என் ெ இ (