பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூஃபி இலக்கியப் பதிப்புகளும் உரைகளும்

இரா. முத்துக்குமாரசாமி

தமிழ் இலக்கியம் எல்லா வகையான சமயங்களாலும் வளர்ந்தது. இந்த நாட்டில தோன்றிய சமயங்கள் மட்டுமின்றிப் பிறநாடுகளில் தோன்றிய சமயங்களும் தமிழ்நாட்டில வேரூன்றி விழுந்துவிட்டுள்ளன. எல்லாச் சமயங்களும் தமிழை வளர்த்தன. தமிழன்னைக்குத் தம்மாலியன்ற வகையில் அணிகலன்களில் சில காலத்தால பழுப்பேறியுள்ளன. அவள்மீதுள்ள அணிகலன்களே அவளுடைய மக்களே அறியாமலிருக்கின்றனர். அந்த அணிகலன் களே மெருகூட்டும் பணி அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப் பெற்றுள்ளது. அத்தகைய பணிகளுள் ஒனறே மறைந்து கிடக்கும் இஸ்லாமியத் தமிழிலக்கியச் செல்வங்களைத் தமிழகூறு நல்லுலகத திற்கு எடுத்துககாட்டும் பணியாகும்.

மக்கத்தில் தோன்றி மதீனத்தில் மலர்ந்த மர்ர்க்கத்தைத் தாங்கள் மேற்கொள்ளினும் இஸ்லாமியத் தமிழ்ப் புலவர் பெருமக்கள தாம பிறந்த தமிழ் மண்ணின் மரபை மறவாது பேணிக காத்து வநதுளளனர். அவர்கள் படைத்த இலககியங் களனைத்துமே தமிழ இலககிய வடிவங்களிலேயே பெரிதும் ஒத் துள்ளன புராணம், கலம்பகம், மாலை, பிள்ளைத்தமிழ் போன்ற தமிழ் மரபையொட்டிய இலக்கிய வகைகளிலேயே தமிழில் சமய உண்மைகளைக் கூறும் நூல்களைப் படைத்தனர். மணணின் மரபை அவர்கள் மறவாத காரணத்தால் தமிழ் மககளும் எசசமயத்தைச் சாாநதவராயினும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சுவையை இனபமுடன் நுகர்ந்து மகிழ்கின்றனர்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் கின பெரும்பகுதி சீருப் புராணம் போன்ற புராணங்களாலும், காபபியங்களாலும் கவரப் பெற்றுள்ளன. எனினும இஸ்லாமியப் பெருமக்களைப் பெரிதும் கவர்நதுள்ளவை ஞானப் பாடல்களேயாம். இஸ்லாமிய ஞானச் செல்வரான குணங்குடி மஸ்தானின் பாடலகளைப் பயிலாத தமிழாகளே கிடையாது. எனலாம். குறிப்பாக அவருடைய நூலைப் பயிலுமபோது அது இஸ்லாமியப் பெருநூலா அல்லது இநது சமய நூலா என்று தெளிவாகத் தெரியாத அளவிற்கு எல்லாம்வல்ல இறைவனை, மூல முழு முதல்வனைப் பாடும் நூலாக அது அமைந்துள்ளது. அவரும் தமிழ்நாட்டுச் சித தர்களுள் ஒருவ ராக எண்ணியபோற்றிப் புகழப் பெறுகிருர், அவரைப் போன்ற மெய்ஞ்ஞானச் செல்வர்களையே இஸ்லாமிய மக்கள் சூஃபி'கள் எனறும் அவருடைய இலக்கியங்களே, மெய்ஞ்ஞானப் பாடல்களை

° to டு “岛 馨 m o 彝 இ o *