பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98

இஸ்லாமிய சமயம் பல்வகைத் தொழுகைக் கட்டுப்பாடு களுடன் கூடியதாகும். எல்லாம் வல்ல இறைவனைத் தொழவும், நேரமும் ஒமுங்குமுறையும் வகுத்துக் கொணடுள்ளது. அச்சம யத்தைச் சார்ந்த அனைவருக்கும் ஆண, பெண, சிறுவர் எல்லோ ருக்கும் இத்தொழுகைக் கட்டுப்பாடுகள் இன்றியமையாதன. ஒவ்வொரு சமயமும் இதைப் போன்ற ஒழுங்குமுறைகளையும் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் வைத்துள்ளது. ஆனல் இம்முறைகளும், சடங்குகளும சாதாரண மக்களுக்குத்தான பெரிதும் பொருந்திவரும். இவற்றைக் கடந்து எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே. அவனே ஞான வழியில் மட்டுமே காண இயலும் என்று எண்ணிய ஞானிகள் எல்லாச் சமயத்திலும் உள்ளனர்.

இத்தகைய ஞானிகள் புறவேடங்களிலும் சடங்குகளிலும் தம் நாட்டத்தைச் செலுத்துவதில்லை. தமக்குள் தாமே இறை வனைக் காண முயல்வர். இத்தகையோர் பிறரைப்போல இல்லற நெறியை நாடுவதில்லை. துறவு பூண்டு மக்கள் நடமாட்டமற்ற காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்வர். உடலை வளர்க்கும் உணவை உணபதை விட்டுவிட்டு ஞான அறிவை வளர்க்கும் பணியிலேயே ஈடுபட்டிருப்பர். தமிழ் மக்கள் இவர் களைச் சித்தர்கள் என்பர். இஸ்லாமியப் பெருமக்கள இவர்களைச் 'சூஃபிகள் என்பர்.

"சூஃபிகள் என்போர் இஸ்லாத்தின் முன்னணி வீரர்கள். ஆத்ம விசாரணைக்கும், சத்திய சோதனைககும் உளளாகி அரிய சாதனைகள் செய்திட்ட அறிஞர் பெருமக்கள், கருமம், ஞானம், பக்தி, யோகம், ஆகியவற்றின்மூலம் உள்ளும் புறமும் ஒளி பெற்று இலங்கும் இறையன்பர்கள இறைவனுடன இரணடறக் கலந்து அறியாப் பெருநிலைப் பெற்ற நிறைஞானிகள்.

‘சூஃபி என்ருல் கம்பளி என்று பொருள். தொடக்கத்தில் இஸ்லாமியப் பெரு ஞானிகள் கம்பளி ஆடைகளையே அணிந்து வந்தனர். எனவே அவர்கள் சூஃகள் என அழைக்கப் பெற்றனர் என்பர். இதற்கு வேறு விளக்கம் கொடுப்பாருமுளர்,

‘சூஃபிகள் என்பார் மெய்ஞ்ஞானிகள். இவர்களைத் தமிழ் தாட்டுச் சித்தாகளோடு ஒப்பிடலாம். மெய்ஞ்ஞானம் என்பதைக் கவிஞர் பேராசிரியா அப்துற் றஹ்மான அவர்கள் எளிய கவிதை வடிவில் விளக்கியுள்ளார்கள்