பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii

ஆதியாகிய பெரியவனே

ஆல மடங்கலும் புகழ்ச்சி உளள நீதி ரஹ்மா னேவல லவனே

நெறியுள் ளோர்க்கெலலாம் தயாள வேந்தே ஓதி உணராத பாவி கட்கும

உதவி செய்கின்ற பரம்பொருளே பாத கன என் மேல பாரில் உள்ளோர் பகையாமற் காருன் அடைக்கலமே

ஆலம்அகில உலகு :றஹ்மான்-அளவற்ற அருளாளன்)

அபிராமம் ஆ. மீ. இ. காதர் முகையதீன் என்பவர் இயற்றியது வேத மெய்ஞ்ஞான நூல். 1933இல் வெளியிடப் பட்டது இந்நூல். இவ்வேத மெய்ஞஞான நூலில் கடவுள் துதியைத் தொடர்நது துதிப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சற்குரு நபிகள் நாயகம், முகியித்தீன் அப்துல்காதீா, நாகூர் சாகுல் அமீது, ஏர்வாடி செய்யது இப்ராஹீம் முதலிய பெரியார் கள் மீது பாடப்பட்ட துதிப்பாடல்களைத் தொடர்ந்து இல்மின்ஸான் பாடல் அமைந்துள்ளது. கிளிவாலைக் கண்ணிகள் எனனும் புதிய ஒரு வடிவமும் இடம் பெற்றுள்ளது அடுத்து நொண்டிச்சிந்துகள் இடம் பெற்றுள்ளன. இந்நொண்டிச் சிந்துகள் மூலம் மலக்குகளையும் வேதங்களையும் நபிமார்களேயும் கியாம முடிவையும் அறிவது பற்றியும் இஸ்லாத்தின் ஐநது காரியங்கள் அறிவது பற்றியும் போதிக்கப்படுகிறது. வேத மெய்ஞ்ஞான மஞ்சரி ஆக அமைந்துாைள அடுத்த பகுதியில் விருத்தங்களும் கீர்த்தனங்களும் இடம் பெற்றுள்ளன பல்வேறு சந்தங்களில பாடக்கூடியனவாக இக்கீாத்தனங்கள் அமைந் து ள்ளன. இந்நூலில் அமைந்துள்ள மற்ருென்று ஆனநதக் களிப்பு.

முத்திசசுடர் என்பது மற்ருெரு நூல். கொணடச்சியைச் சேர்நத முகம்மது சரீபுப் புலவர் இதனை இயற்றி உள்ளார். கெளது நாயகர் காரணப் புராணம் என்னும் காப்பியத்தையும் இவர் இயற்றி உள்ளார். இவர் பிறந்த இடமாகிய கொணடச்சி மன்னர்ப்பகுதி முசலி தெற்கில் உள்ளது. இலங்கையின் வட மாகாணத்தின் ஒரு துறைமுகப் பட்டினமாக மன்னர் விளங்கு கிறது.