பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

பாடல்கள் சமய வேறுபாடு கடந்து எல்லாச் சமயத்தாராலும் பாடிப்படித்து மகிழப் பெறுவன.

இராமநாதபுர மாவட்டம் குணங்குடி என்னும் சிற்றுறில் கி. பி, 1787இல் தோன்றியவர் இவர். இவர் தம் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதிறு பதினேழு அகவையிலே பெரியோர்கள் மணமுடிக்கத் திட்டமிட்டிருந்தபோது வீட்டை விட்டு வெளி யேறி ஞானநெறியில் புகுந்தவர் அவர். பல ஊர்கள் செனறு பல்லோரிடம் ஞானச்செலவம் பெற்று இறுதியாக இராயபுரத்தில

1834இல அடககமானவர்.

குணங்குடியாரின் பாடல்கள் பெரும்பாலும் அவர்தம் குரு நாதர் முகையித்தீன் ஆண்டகையை முனனிறுத்தியே அமைந் திருக்கும். அவர் தம் பாடல்கள் தமிழ்ச்சிததர் பாடல்களுக்கு ஈடு இணையற்றவை.

'வற்ருத சமுத்திரமே, வள்ளலே வான்பொருளே சித்தர் உளத்தில் தெளிவே நிராமயயே’

என்று தம்மைச் சித்தராக்கித் தாம் வணங்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்வைச் சித்தர் உளத்தில தெளிவாக்கியவர் குணங் குடியார்.

இறைவனை நாயகநாயகி பாவத்தில் தம்மை நாயகியாக்கி இறைவனை நாயகனுக்கிப் பாடுவார் பலர். குணங்குடியார்தம்மை நாயகனுகவே வைத்துக் கொண்டு இறைவனே நாயகியாக்கிப் பாடிய மனேன்மணிக் கண்ணிப் பாடல்கள் படித்துப் படித்து மகிழத்தக்கவை.

"என்னைவிட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ

உனறனுக்கே

உன்னைவிட்டால் பெண எனக்கு உண்டோ

மனேன் மணியே'

என்று குணங்குடியார் பாடலைப் படிக்கும்போது அவருக்கு இறைவன் மேல் எவ்வளவு ஈடுபாடு என்பதை உணரமுடிகிறது.

இத்தகைய மெய்ஞ்ஞானப் பாடல்களை இஸ்லாமியப் பெரு மக்கள் மட்டுமல்லாது இந்து சமயப் பெருமசகளும பெரிதும் விரும்பிப் படித்தனர். இப்பாடலகளை முதன. முதலில் விரும்பித் தொகுத் தவரே ஓர் இந்துதான். குணங்குடி மஸ்தான அவர்கள்