பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

கொழும்பு மீனம்மாள் அச்சியந்திர சாலையில் 1922இல் அச்சிடப் பெற்றுள்ளன.

இந்நூலில் மெய்ஞ்ஞானத்தங்கப் பாட்டுமாலை (156) விபா மாலை (70) தாய்மகளேசல் (101) திருமணி நடனவலங்காரப் புஞ்சம் (300) உகதத்துமாலை (48) வாகிதிய்யாமாலை (65) ஞானக்கண்மாலை ( 08) சன்ஜில் கருமாத்துமாலை (251) முதலிய பல சிறுநூல்கள் அடங்கியுள்ளன.

திருவனந்தபுரத்தைச் சார்ந்த கணியாபுரத்து மெய்ஞ்ஞான சொருபராகிய செய்கப்துல்காதிறு வாலைமஸ்தான் சாகிபவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஞானப் பாடல்கள் ஞான வாக்கியம்' என்ற தலைப்பில் காயற்பட்டணம் கண்ணகுமது மகுது முகம்மதுப் புலவரவர்களாற் பார்வையிடப்பெற்றுச் சென்னை சாகுல் அமீ தியா அச்சியந்திர சாலையில் 1928இல் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இதிலுள்ள பாடல்கள் 424.

தென்காசிப்பதியிலெழுந்தருளி திருவனந்தபுரம், புனலூர் கொழும்ப முதலியவிடங்களில் வாழ்ந்த ஞானதிக்கரென்னும் ஆ. சி. பரிமளம் முகமமதுகாசிம் சாகிபு அவர்கள் பிற்காலத்தில் வாழ்ந்த மெய்ஞ்ஞானச் செல்வர்களுள் ஒருவராவார். இவர் தம் அருட்பாடல்கள் 1555ம் ஞானமிர்த போதனை” என்ற தலைப் பிலும் பரிமளத்தார் பாடல்’ என்ற துணைத்தலைப்புடனும நூலா கியுள்ளன. ஞானரததின ஒளிதீப முளுஜாத்து, நெஞ்சகக்கும்மி உயிர்க்குருக்கணணி, தனனையறியும் பதம் போன்ற பல தலைப்புக் களில் இவர் பாடியுள்ளார்.

பரிமளத்தாரின் மனைவி இறகுல் பீலி அம்மாளும் கணவரைப் போலவே ஞானப்பாடல்கள் பாடும் ஆற்றல் பெற்றுச் சிறந்து , விளங்கியுள்ளார். ஞானமிர்த சாகரம்’ என்ற நூலில் அறநூறுக்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன. என்தாய்க்கணணி, குருபரக்கணணி, கப்பல்சிநது, தாய்மகளேசல், அம்மானை நெஞ் சோடு புலம்பல் போன்ற பல தலைப்புகளில பாடல்கள் அமைத் துள்ளன. அம்மையாரின் புதல்வர். முகமமதப்பாசு சாகிப் அவர்கள் தென்காசி ராமானுஜம் அச்சுயந்திர சாலையில் 1910இல் . இதைப் பதிப்பித்துள்ளார்

காயற்பட்டணம் செய்குமுகம்மது ஹாலிஹ ஒலியுல்லா அவர்களின் குமாரர் மெய்ஞ்ஞானி அப்துல் கனி சாகிப் அவர் களின் ஞானப்பாடல்கள் ஞானந்த ரத்தினம் முதற்கண நாகை