பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடக்கவுரை

இஸ்லாமிய ஞானிகள் தமிழிலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு செய்திருக்கும் தொணடுசளே தமிழ உலகம் எப் போதும் நன்றியுடன் போற்றி வருகிறது.

தமிழ் இலக்கியம், குறிப்பாகத் தமிழில் உள்ள சமய தத்துவ இலக்கியங்கள் எந்த அளவு இஸ்லாமியத தததுவக் கருத்தால் பாதிக்கப்பட்டது, அதுபோலவே முஸ்லீம் ஞானிகளால் ஆக்கப் பட்ட தமிழ் சமய பக்தி நூல்கள் எநத அளவிற்குத் தமிழ் நாட்டில் இஸ்லாத்துக்கு முன்பிருந்த சமய பக்திக் கருத்துக் களால் பாதிக்கப்பட்டன என்பதையும் காணவேணடும்.

ஒன்று இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை, மற்ருென்று இஸ்லாம் தமிழ் நாட்டுக்கு வந்தபோது இங்கே நிலவியிருந்த சமயக் கருத்துக்கள்.

இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கை மிக எளிமையானவை, "இறைவன் ஒருவனே; அவனே அல்லா அவனை நேசிப்பதை போல் நடிப்பதைவிட அவனிடம் பயபகதி பூண்டு அவனுடைய குழந்தைகளாகிய மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும்’ என்பதுதான்.

இஸ்லாம் தமிழ்நாட்டில் அடி எடுத்து வைத்த காலத்தில இங்கு சைவம், வைணவம் ஆகிய மதங்கள் மேலோங்கியிருந்தன. இவை கடவுள் ஒருவரே எனற கொள்கையை உடையதாக இருந் தாலும், பக்தி இயக்கத்தின் காரணமாக ஏக ெத ப் வ க் கொள்கையின் அழுத்தத்தையும், உறுதியையும் இழந்து மக்க ளிடையே பல தெய்வ வழிபாடு இடம் பெறும் படி ச் செயதுவிட்டன.

ஏக தெய்வக் கொள்கை சம்பந்தப்பட்ட வரையில் இஸ்லாம் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

தமிழ் நாட்டு சைவ, வைணவ மக்களிடையே ஏக தெய்வ வழிபாடு இலகுவில் அவர்களிடம் இருந்து பிடுங்கி எறிந்துவிட முடியாதபடி வேர் ஊன்றி விட்டது.

அந்த நாளிலேயே ஏக தெய்வக் கொள்கையை வலியுறுத்தித் தமிழகச் சித்தர்கள் பாடுபட்டு வந்தார்கள். தமிழ்நாட்டுச்