பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV

சித்தர்களின் கோட்பாடுகளுக்கு ஏற்றபடியாக முஸ்லீம் சூஃபி களுடைய கோட்பாடுகளும் அமைந்து இருநதன.

முஸ்லீம்களிடையே சூஃபிகள் எப்படித் தோன்றிஞர்கள். மனித வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியிலே ஈடுபட்டு ஆத்ம விசா ரணையில் ஆழ்ந்து, ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, இறை வழிபாட்டிலே இனபங்கண்ட மக்கள் உலக வரலாற்றிலேயே உயரிய இடங்களைப் பெற்றிருக்கின்றனர்.

இத்தகைய உத்தம மன்தர்கள் பண்டைக்காலம் தொடங்கி இனறுவரை எல்லா நாடுகளிலும், எல்லா இனத்திலும் ஒளி வீசிக்கொணடிருக்கின்றனர்.

இவர்கள் எல்லோரும் சூஃபிகள்தான். ஆளுல் இஸ்லாமிய சமயத்தில் இருக்கும் ஞானசித்தர்களை சூஃபிகள் என்று குறிப்பதே இன்று வழக்கமாயிருக்கிறது.

சூஃபி எனற சொல் போபாஸ்’ என்ற கிரேக்க அடிச்சொல்லி லிருந்து வந்ததாகக் கூறி அதற்கு அறிவாளி என்று பொருள் சொல்லி வந்தனர்.

அந்த நாளில் டாக்கா மஸ்லீன் போன்ற ஆடைகளை உயர்குல மக்கள் அணிந்து வந்தனர். அப்போது ஆடம்பரத்தையும் பகட்டையும தவிர்த்த சூஃபிகள் கரடு முரடான கம்பளி ஆடை களேயே அணிந்து வந்தனர். கம்பளி ஆடை அணிந்த ஞானிகளை "சூஃபி என்ற சொல் குறிப்பிடுவதாய் அமைநதிருந்தது.

நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்த அவருடைய திண்ணைத் தோழர்களையும் சூஃபிகள் என்று சொன்னதாக சிலர் கருது கிருர்கள். ஆனல் ஆராய்ச்சி மிக்க அறிஞர்கள் இநதச சொல் தூய்மை எனனும் பொருளைக் குறிக்கும், சபா' எனற அரபுச் சொல்லிலிருந்து வந்ததாகச் சொல்கின்றனர்.

தூய்மையான வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்த சான்ருேர்களைத் தமிழில் அறிஞர்கள் என்றும், வடமொழியில் சித்தர்கள் என்றும் வழங்கியுள்ளனர்.

தொல்காப்பியத்தில் மனிதர்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய வெற்றியை ஏழாகப் பிரித்துச் சொல்லப்பட்டிருக் கிறது. அவற்றுள் ஒன்று அறிவர்கள் அதாவது சித்தர்கள்’, சூஃபிகள் அடையும் வெற்றி என்று சொல்லப்பட்டிருககிறது.