பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii

தமிழ் நாட்டுச் சித்தர் பாடல்களும், சூஃபிகளின் பாடல் களும் பேதமில்லாமல் முழங்கி வந்திருக்கின்றன,

'நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து முணமுண என்று சொல்லு மந்திரம ஏதடா, கட்டகல்லும் பேசுமோ நாதன உள் இருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!'

இப்படி சிவவாக்கியர் பாடியுள்ளார்.

"ஓசை உள்ளகல்லே நீர் உடைத்து இரண்டாய்ச் செய்துமே வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர்! # பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துநீர்! ஈசனுக்கு உகந்தகல் எந்தக் கல்லு சொல்லுமே!'

  1. =

இது பட்டினத்தார் பாட்டு.

'உள்ளம் பெரும் பெரும்கோயில் ஊன் உடம்பு ஆலயம் வள்ளல பிரானுக்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெரிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப்புலவன்'ஐந்தும் காளா மணிவிளக்கே"

இது திருமூலர் அருளிய திருமந்திரப் பாடல்.

இந்தப் பாடல்களில் ஒரு மத்தியக் கருத்துத் தெளிவாக உள்ளதைக் காணலாம். இறைவன், ஒருவன். அவன் உருவம் அற்றவன். அவன் எங்கும் நிறைந்தவன. அவனே உள்ளத்தில் இருத்தி உணர்வு பூர்வமாக வழிபட முடியுமே தவிர, வெறும் வெளிச்சடங்குகளால் முடியாது என்பதாகும்.

"முத்தொடு பவளம் பச்சை முதலொளி புரிவனும் கூட்டிச் சத்தியாய் சிவஞய இந்தத் தாணி தன்னில் ஆக்கிப் பத்தியாய் எனவளர்த்த பரமனே உனையான் பாட இத்திசை அனைத்தும் போற்றும் இறைவனே துணை

+ செய்வாயே

இது பீர்முகம்மது அப்பன பாடல்.

அவர் சிவன் என்றும் சக்தி என்றும் பாடி இருக்கிருர், இதற்குப் பரமசிவன் என்ருே பார்வதி என்ருே பொருள கூற