பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧ

இப்படியாகத் தமிழ் நாட்டுச் சித்தர்களும், சூஃபிகளும் ஏக தெய்வக் கொள்கையையும் சாதிமதம் கடந்த சகோதரத்துவத் தையும் வற்புறுத்தியிருக்கிருர்கள்.

இவ்வாருக ஞானத் தமிழ் இலக்கியம் சித்தர்களாலும் சூஃபி களாலும் போற்றி வளர்க்கப்பட்டு வந்துளளது. இந்த ஒருமைப் பாட்டுக்குத் திருவருட்பிரகாச வள்ளலார் என்ற புகழ்பெற்ற ஞான சித்தர் ஒரு அருமையான மார்க்கத்தை அருளியிருக்கிரு.ர். துண்டுபட்டுக் கிடக்கும் உலக மக்கள் எல்லாரும் ஒன்றுபட்டு வாழ்வதற்காக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை உருவாக்கி வழங்கியிருக்கிரு.ர்.

வள்ளலாரின் ஏக தெய்வ வழிபாட்டையே பழைய சித்தர் களும் சூஃபிகளும் தொடர்நது வலியுறுத்தி வந்திருக்கிரு.ர்கள் இந்த அருளாளர்களுடைய நெறியை ஆராய்ந்து, உணர்ந்து அன்ருட வாழ்வில் அனைவரும் மேற்கொண்டு இன்பத்துடன் இணைந்து வாழ்வதற்கு இந்த சூஃபிகளின் மெய்ஞ்ஞானத் தமிழ் இலக்கியங்கள் வழி காட்டுமாக!

அருள் நெறிக் காவலர் கா. மகாலிங்கம்