பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii

அவர்கள் கருத்து யாதோ என்று நினைக்கவேண்டுமே தவிர குயுகதி கொண்டு குறைத்து மதிபபிடக் கூடாது. இவை அனைத்தும் இறை நம்பிககை உளளவர்கள் உணர்தல் வேண்டும்.

மணங்கமழும் இஸ்லாமிய இலக்கியத்தை-மெய்ஞ்ஞானப் பேரமுதை அனைவரும் அள்ளிப் பருக வழிகாட்டி நிற்கும் அன்பு மணவை முஸ்தபா அவர்களுக்கு என் வாழ்த்தையும், அவர்களின் மகத்தான உழைப்புக்கும உணர்வுக்கும் என் நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இலக்கியச் செலவர்களும் இஸ்லாமிய கவிவாணர் களும் பேரறிஞர்களும் இப்படிப்பட்ட இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்களை ஆழமான கருத்துரைகளை-தங்கள் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சிப்பெருககுகளே கட்டுரைகள் வடிவாக வடித்து, மெய்ஞ்ஞானிகள் அருளிய தேனினுமினிய பாச்களைப் பொறுக்கி அதை அழகுபடுத்தி இத்தொகுப்பை மணக்கச் செய்துளளதைக் பார்த்து உள்ளம் பூரித்தவகை அவர்களுக்காக துஆ செயகிறேன். மணவை முஸ்தபா அவர்களின் இம்மகத்தான பணி, முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் பேரருளளாளுகிய, பேரன்புடையோளுகிய அலலாஹ்வின் அன்பைப் பெறவும் அருளே அடையவும் அவனின அளப்பரிய ஆறறலை அறிநது கொள்ளவும் உதவுவதற்கு உறுதுணையாக அமையவேணடும் என்று ஆவல்படுகிறேன், அல்லாஹாத் தஅலா அன்பு மணவை முஸ்தபா அவர்களின் உள்ளத்தில் எழுசசியை செயலுருவாக்கி மக்கள் யாவரும் பலன பெற அருள் புரிவாகை. ஆமீன் வஸ்ஸலாம்.

மெளலவி மீ. இ. மு. அபுல்ஹலன ஷாதலி ஸாஹிப் (நூரிய்யி, பாஜில் பாகவி)

திருநெல்வேலி ஜங்ஷன் ஆசிரியர் மஜாஅத்துல உலமா" 627 001 -தமிழ மாத இதழ்