பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூஃபித்துவம் தோற்றமும் வளர்ச்சியும்

அல்ஹாஜ் எஸ். எம். சுலைமான், ஐ.ஏ.எஸ்.

-ošša, Quorspou?ā ‘Gnosticism, Mysticism, Theosophy, என்ற சொற்கள் வழங்கி வருவதை நம்மில் பலர் அறிவோம். மேலோட்டமாகப் பார்க்கும் சாமானிய மக்கள் இச்சொற்கள் இறைவனே அடைவதற்கு வழிவகை செய்யும் இறை ஞானத்தைக் குறிப்பதாக எண்ணுகின்றனர். எனினும் அவற்றிற்கிடையே துண்ணிய வேறுபாடுகள் உண்டு என்பதைத் தத்துவவாதிகள் அறிவர். சற்று ஊன்றி கவனிப்போமாயின், Monism, Dualism, போன்ற சொற்கள் தத்துவயியலில் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிருேம். இவற்றினின்று உருவாகும் உட்பிரிவுகளும் உண்டு. இவற்றையெல்லாம் ஆராயப் புகுவோமாயின் கட்டுரை விரிந்து விடும்.

'தஸவ்வுஃப்' (Tasawwuf) அல்லது சூஃபித்துவம் (Sufism) என்பதை இஸ்லாமிய ஆத்மஞானம் (Islamic Mysticism) என்று பொதுவாகக் கூறலாம். அதேபோன்று சூஃபி என்பாரை ஆங்கில ததில் Muslim Mystic என்றும் தமிழில் முஸ்லிம் சித்தர், ஆத்ம ஞானி', 'மெய்ஞ்ஞானி’ என்றும் கூறலாம்.

'சூஃபி என்ற அரபுச் சொல்லின் மூலம் குறித்து வேறுபட்டக் கருத்துக்கள் உள்ளன. தூயமை’ என்ற பொருள் கொண்ட 'ஸ்ஃபா (Safa) என்ற மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான ‘சூஃபி என்பர். சூஃபிகளின சிந்தனை, சொல், செயல் மிகத் தூய்மை வாய்ந்தவை.

வேறு சிலர் சூஃபி என்பது அணி (வரிசை) எனும் பொருள் கொணட ஸஃப் (Saut) எனற மூலததிலிருந்து பிறந்தது எனபர். சூஃபிகள் இறைவன்பால் நாட்டமும் தேட்டமும் உடையவர்கள் தங்கள் உள்ளததை அவனளவிலேயே நிலை நாட்டுவதற்காக இறைச் சந்நிதானத்தில முதல் வரிசை (அணிஸஃப்) யில இடம் தேடிக் கொள்பவர்கள்.