பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

நபிகள் பெருமான் (ஸல்) அவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு மதீனாவிலுள்ள 'மளpதுந் நபவி என்ற பள்ளிவாயிலின் பக்கம அமைந்திருந்த திண்ணைத் தாழவாரத்தில் இரவும் பகலு மாக இறைத் தியானத்தில் ஈடுபட்டிருந்தவாகளாகிய "அஸ்ஹா புஸ் ஸுஃபா' எனும் திண்ணைத் தோழர்களைக் குறிக்கும் தொடரி லிருந்து சூஃபி எனும் சொல் தோன்றிற்று என்று வேறு சிலர்

கூறுவர்.

சில எழுத்தாளர்கள் சூஃப்” என்ற சொல்லைச் சோபோஸ்’ (Sohpos) என்ற கிரேகக அடிச் சொலலுடன் இணைத்து அறிஞன்” என்ற பொருளைக் கொடுக்க முயன்றுளளனா.

அரபு மொழியில் சூஃபி (Soof) என்ருல் முரட்டுக் கம்பளி என்று பொருள்படும். ஆடம்பர வாழவைத் துறந்து, மனே விச்சைகளை அடக்கி, எளிய வாழ்வின சினனமாய்க் கம்பளியை விரும்பி அணிந்து கொண்டதின காரணமாக சூஃபிகள்’ எனப் பெயர் பெற்றனர் எனறு இன்னும் சிலர் கருததுத் தெரிவித் துள்ளனர்.

'தஸ்வவுஃப்’ என்பதற்கு சூஃபிகளே விளக்கங்கள் தந்துள்ள னர். அவையனைததின சாரத்தையும் கொணடதாக அமைத் துள்ளது, ஷைகுல் இஸ்லாம் ஜகரிய்யல் அன்ஸாரி (ரஹ) அவர் களின் விளககம்

'உள்ளத்தைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி, மாசற்ற உயர்ப் பண்புகளை வளர்த்து, அகத்தையும் புறத்தையும் ஒரு சேரப் பரிபக்குவப் படுத்துவதற்கான வழி வகைகளை அறிநது கொள்ள உதவும் ஞானமே தளவவுஃப் ஆகும நிலையான பேரின்பப் பேற்றைப் பெறுவது தான் அதன் நோக்கம்’ ஒரே சொற் ருெடா கொண்டு விளக்குவதாயின் சுயக் கட்டுப்பாடு-தன்னைத் தானேக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல்-எனறு சொல்லிவிடலாம். தன்னைக் கட்டுப்படுத்திக கொண்டு இறைவனது பாதையில் முடுகி அவனில கலப்பதே சூஃபிகளின் வேணவா. ஞானிகள் மூனறு அடையாளங்களால் அறியப்படுகிரு.ர்கள். அவர்கள் சிந்தனை இறைவனைப் பற்றியது; அவர்கள் இறைவன்மாட்டு வாழ் கிரு.ாகள்; அவர்கள் தொழில் இறைவன் மாட்டு அமைந்து கிடக் &pg|. (The saints of God are known by three signs—their thought is of God, their dewelling is with God and their business is in God) இரததினச் சுருககமாக, 'தஸ்வவுஃப்’ என்பது 'இறைவன உனனை உன்னளவில் இறநது படுமபடி செய்து,