பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 朝

(ஏக உள்ளமை) சாரமும், ஆழ்ந்த நோக்கில் ஒன்றேயென்றும். அவற்றிற்கிடையே வேற்றுமை எதுவும் இருப்பின் அது மிக அற்ப சொற்பமேயென்றும, அதைப்பற்றி வீணுக விவாதிக்கத் தேவையில்லையெனறும் அறிவுறுத்துகிருர்கள். இருப்பது இறை வன் ஒருவனே. பார்க்கப்படுவதெலலாம் இறைவன் ஒருவனே. இருப்பதைத்தானே பார்க்கமுடியும். பார்ப்பதற்கு ஒளியும் வேண்டுமல்லவா? "மெய்ஞ்ஞான வீடு நீ, வீட்டின விளக்கு நீ விரிகதிாச்சுடர் நீயே’’ எனக் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல் அமைந்திருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது.

தரீக்கத்தெனும் ஞானவழியில் பிரபலமான பதின்ைகு வணக்க வழி -அமைப்புகளில் (லில்லtலா-தரீக்) ஐந்து அமைப்பு புககளே இந்தியாவில் வேரூன்றிக் கிளேத்து அருட்கனியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அவையாவன: (1) சிஸ்த்தியா அமைப்பு. இதை காஜா அபூ அலி இஸ்ஹாக் ஷாமி சிஸ்த்தி (ரஹ்) இந்தியாவில் அறிமுகப்படுததினர்கள். காஜா முய்னுத்தீன் சிஸத்தி (ரஹ்) வேருன்றச் செய்தார்கள். (2) காதிரிய்யா : இது கெளதுல அஃலம் ஷெய்க் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்) அவர் களைப் பினபற்றுவோர் அமைப்பாகும். (3) ஹபிஹரவர்திய்யா : அப்துல காதிர் ஸாஹரவர்தி (ரஹ) உமர் ஸாஹரவர்தி (ரஹ்) என்ற இருவராலும ஆரம்பிக்கப்பட்டது. (4) நக்ஷ்பந்தியா: நக்ஷ்பந்த் முகம்மது பின் முகம்மது பஹாவுத்தீன் அல் புகாரி (ரஹ்) அவாகளால் நிறுவப்பெற்றது (5) ஷாதிலிய்யா: அபூ மத்யன் (ரஹ்) அவாகளால் துவக்கப் பெற்று அபுல ஹஸன் ஆலிபின் அப்துல்லாஹ் அல்ஷாதிலி (ரஹ்) அவர்களால் நிறைவு பெற்றது.

ஒவ்வொரு அமைப்பிலும் தனித்தன்மை வாய்ந்த சில முக்கிய விதிகள் உண்டு அதன் உறுப்பினர்கள் தங்களின் ஆத்மீக வலிமை இறைபக்தி, தாராள நோக்கு இவற்றின் துணைகொண்டு இஸ்லாமியக் கொள்கைகளைக் உபதேசிப்பார்கள். ஒவ்வொரு ஆதமஞானச் சீடனும் ஞானகுருவிடம் தீட்சை (பைஅத்) பெறுவது அவசியம்,

தமிழ் நாட்டைச் சற்று நோக்குவோம். தமிழகத்தில் தோன்றி இஸ்லாமிய நெறியினைப் பின்பற்றித் தாங்கள் கொண்ட கொள்கைகளையும், கண்டகாடசிகளையும் தமிழ்க் கவிதைத் தேனிலே வடித்தெடுத்த சூஃபிகள் பலர் உள்ளனர். குணங்குடி மஸ்தான சாகிபு, தக்கலை பீர்முகம்மது சாகிபு. கோடைநகர் மெய்ஞ்ஞானி ஷைய்க் முஹ்யித்தீன் மலுக்கு முதலியார்,