பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூஃபிகளும்-சித்தர்களும்

டாக்டர், இரா. மாணிக்கவாசகம்

சித்தர்-ஒரு விளக்கம்:

ஆன்மீகத்துறையில் உயர்நிலை பெற்றவர்களில் ஒரு சாரார்

சித்தர்கள் சித்தி-சித்து-. சித்தர் என்னும் சொல்லுக்குப்

பல்வேறு கோணங்களில விளக்கம் தருதல் கூடும்.

சிந்தை தெளிந்து சித்தத்தை வென்றவன் சித்தன்-வெல்வது சித்தி-வென்றவன் செயல் சித்து என்பது ஒரு விளக்கம்.

"சிந்தையிலே களங்கமற்ருர் சித்தவைான்

-50 அகத்தியர் குரு நூல் முப்பூ 50

"சிந்தை தெளிந்திருப்பவனே யவனே சித்தன்

செகமெலலாஞ் சிவமென்றே யறிந்தோன் சித்தன்'

-2 வானமீகி சூத்திரம் 16

மேற்கண்ட வரிகள் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

சித்தி எனும் சொல் அடைதல் என்னும் பொருள் தருவது. பெறத்தக்க பேறுகளிலேயே உயர்ந்ததாகிய சாயுச்சிய நிலை அடைந்தவர்களேச் சித்தர்கள் எனவும் கூறுதல் கூடும்.

குறியான சிவயோகம் சித்தியாச்சு’

-21 நிஜானந்த போதம் சித்தர் ஞானக்கோவை

என்பது காண்க.

சித் என்னும் சொல்லுக்குப் பேரறிவு என்பது ஒரு பொருள். சச்சிதானந்தம் (சச்+சித்+ ஆனந்தம்) என்னும் சொல்லைக் காண்க. இப்பேரறிவைப் பெற்றவன் சித்தன் எனவும் கூறலாம்

சிவனுக்குச் சித்தன் என்ற பெயரும் உண்டு சக்தியை

வழிபடுபவர் சாக்தர் எனவும், புத்தரைப் போற்றுபவர் பெளத்தர்

எனவும், விஷ்ணுவைப் பின்பற்றுபவர் வைஷ்ணவர் எனவும்

2