பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8

குறித்தல் போல சிவனைச் சித்தகைக் கொண்டவர்கள் சித்தர்கள் எனக் கூறலாம். சமயம் என்ற எல்லைக்குள் நின்று சிவனைப் பாடியவாகள் சைவர்கள்; இந்த எல்லே கடநதவாகள் சிததர்கள் என்ற அமைதி கூறலாம்.

இப்படிப் பல விளக்கங்களைத தருதல் கூடும்”. இவர்கள் சமய ஆசாரங்களையும், மதக் கோட்பாடுகளையும் கடந்தவாகள். ஆதலின் சைவ சமயச சிததர்கள், வைணவ சமயச் சித்தர்கள் எனக் கூறும் மரபு இல்லை. என்ருலும் தமிழகத்தைப் பொருத்த வரையில் புறச் சமயங்கள் என வரலாற்து ஆசிரியர்களால் குறிக்கப்பெறுகின்ற சமணம், பெளத்தம், கிறிஸ்துவம், இஸ்லாம் முதலிய நெறிகளின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் கட்டுப்படாது உயர்ந்தவர்களே அவ்வச் சமயங்களின பெயரோடு இணைத்துச சமணச் சித்தாகள், பெளத்தச் சிததர்கள், கிறித்துவச் சித்தர்கள், இஸ்லாமியச் சித்தர்கள் என வழங்குவது காணலாம். (mystics of Jainism, mystics of Buddhism, mystics of chrstianity; mystics of Islam). இஸ்லாமிய சித்தர்களைச் 'சூஃபிகள், என்னும் சொல்லாலும் குறிக்கின்றாகள்.

சூஃபி-ஒரு விளக்கம்

சூஃபி என்னும் சொல்லுககுக் கம்பளி ஆடை தரித்தவர்' என்னும் பொருளை மிகப்பரவலாகப் பலர் கொண்டு பேசியும் எழுதியும் வருகின்றனர். என்ருலும் இச்சொல்லுககுப் பல்வேறு கோணத்து விளக்கங்கள் தரப்படுகின்றன என்பதையும் இங்குக் குறித்தல் வேண்டும்.

SAFA (purity) என்னும் சொல் தூய்மை எனனும் பொருள் உடையது. உலகியல பிடிப்புக்களில் இருந்து விடுபட்டு அகப் புறம் இவற்றில் தூய்மை பெற்றவர்களைச் சூஃபி'கள், என்னும் கருத்தை மிகப்பலர் ஆதரிக்கின்றனா.

SAFF (rank) என்னும் சொல் தகுதி என்னும் பொருள் உடையது. இறையோடு இரண்டரக் கலக்கும் உயாநிலைத் தகுதி பெற்றவர்களைச் சூஃபி என்றனர் என்னும் கருத்தும் நிலவுகிறது.

SUEFA (bench) என்னும் சொல்லில இருந்து சூஃபி எனும் சொல் பிறந்திருக்கலாம் என்னும் கொள்கையுடையவர்கள், மதீனவில் கட்டப்பெற்ற தொழுகையிடத்தில் மசூதியின் வெளிப் புறத்தில் இருந்த மேசையையே தமது தங்குமிடமாகக் கொண் டிருந்த சில வறிய துறவிகளை இச்சொலலால் குறித்தனர் எனக் கருதுவர்.