பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

கூவென்ற சொற்கேட்டு நபிமாரெல்லாம்

குண்டலியைத் தானசைத்துத் தீன்தீனென்ருர் ஆவெனற சொற்கேட்டு ஓடிவந்தேன

அசனுசனும் வேறலல தோனென்ருர் மாவெனற ரொட்டியொன்று யீய்ந்து பின்பு

மக்கத்தி லேயிருங்க ளென்று சொல்லி ஈவென்றுஞ் சொல்லாது கலிமாவோதி

இருந்தேனே சிலகாலம் யாகோப்பென்றே

-614. யாகோபு வைத்திய சிந்தாமணி 700

இவை சில சான்றுகள். இவரைச் சூஃபிகள் கூட்டத்தில் சேர்த்தால் அக்கூட்டத்தில் இவர் ஒருவரே வைத்தியம், வாதம், யோகம் மூன்று பற்றியும் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர், எனத் தயங்காமல் கூறலாம். மற்றவர்கள் யோகம் பற்றியே பாடியுள்ளனர். சில தோத்திரப் பாடல்களாகவும் உள்ளன என்பதும் உண்மை.

பரிபாஷை

சித்தர் இலக்கியங்களில் மறைமுகமாகக் கருத்துக்களைச் சொல்வது மரபு. இதனை இலக்கணத்தில் குழுஉக்குறி என்பர்’. பொற்கொல்லர் பொன்னைப்பறியென்றும், யானைப்பாகர் ஆடை யைக் காரையென்றும், வேடர் கள்ளைச் சொல் விளம்பியென்றும்

வழங்கும் இத்தொடக்கத்தன குழுஉக்குறி.

ஒரு குழுவிலுள்ளோர் யாதானும் ஒரு காரணத்தால் ஒரு பொருளினது சொற்குறியை யொழித்து வேருெருசொற்குறியால் கூறுவது குழுஉக்குறியின் இலக்கணம், 'மாமியார் வீடு சென்ருன், 'கம்பி நீட்டினன் முதலிய எடுத்துக் காட்டுக்கள் புதியன. இவை நேரடியாகக் குறிக்கும் பொருள் ஒன்று; உணர்த்தும் பொருள் ஒன்று இவைபோன்ற பரிபாஷைகளை மிகப் பரவலாகச் சித்தர் கள் நூல்களில் காணலாம். எந்தக் காலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு சில பரிபாஷைச் சொற்களைத் தவருமல் குறிப்பதையும் காணலாம்.

இனி மஸ்தான் சாகிப் அவர்களின் பாடலில் வரும் இரு சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு விளக்குவோம்.

கட்டிப் பிடிக்கினுங் கைக்கடங் காமனங்

கவிவதிலலை யென்ற முவனே கருவிகர ணம்பாய்கு வது கண்டு கண்கலக்

கங்கொண்டு கின்ற முவனே