பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

பெருமாளுரின சிறப்பு அடையாளங்களைப் பாடுதலும் சில புலவர் ஞானிகளின பாமரபு. நூஹ ஒலி பாடிய வேதபுராணம் பதினெரு சிறப்பு அடையாளங்களையும் (கலிமா முதலிய காரணப் படலம் 5, 6,) குருவித்துறை முகம்மது ஹம்சா லெப்பையின் மெய்ஞ்ஞானரததினுலங்காரக் கீர்த்தனையும் (28), மேலப்பாளைய மெய்ஞ்ஞானி பவுதிரொலி மெய்ஞ்ஞானச் சதகத்திலும (64)பாடு மாறு போல, ஆஷிக்கு அவதாரமாலையும் 'சாய்கை நிழல் அடி ரூபம் இல்லை' என ஆரமபித்து ஆறு சிறப்பு அடையாளங்களைப் பாடுகிறது

'கல்பு’க்கு வரைவிலக்கணம் கூறும் பகுதிகளும் உடலின் உள் உறுப்புக்களை ஞானரீதியாக ஆய்ந்து பாடுதலும் பட விளக்கம் தருதலும், இந்நூலின குறிப்பிடத்தக்க பகுதிகளாம. மஅரிபா வின் மர்மங்களை மறைக்காமல மொழிந்துள்ளார். ஒவ்வொரு பகுதியும் ஒய்வில் ஆய்ந்து கற்றுய்யத்தக்கன. இவரின் மற்ருெரு அரிய நூலான 'நூருல் இன்சான? கிடைக்கப் பெறவிலலை.

சூஃபி இலக்கியங்கள் அனைத்தும் ஒருங்கே கிடைக்கப் பெறு மாயின், ஆய்வு பயன பெறும், ஞான இலக்கிய ஆய்வு வளரும். இன்பத் தமிழில் ஞானம் பாடிய இஸ்லாமியர்கள் புகழ் விரிந்து பரவும்.

தமிழகத்திலிருந்து சூஃபி ஞானிகள் இலங்கைக்கு வருகை தந்து சூஃபி ஞானத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள மையும் இவண் குறிப்பிடத்தக்கது.

தமிழக சூஃபி ஞானியர்களது ஞான இலக்கியங்கள் பலவும் இலங்கையில அச்சிட்டு வெளிக் கொணர்ந்த பணியும் இவன நன்றியுடன் நினைவு கூறத்தக்கன. இவைகளெல்லாம் தனித்தனி ஆய்வுப் பகுதிகளாக அமையுமன்ருே!