பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

107


ஏற்கெனவே சீரழிந்தவர்களை, குருடாக உலவுபவர்களை, நொந்து கொண்டு என்ன பயன்? சில நூறு பேரான நாம் ஒரு இயக்கமாகச் சேர்ந்து செயல்படத் தயாராக இல்லாதவரை தமிழ்க் கலாச்சாரம் செத்துத்தான் கிடக்கும்.

சிறு பத்திரிகை இயக்கம் என்று வலுவான அஸ்திவாரங்களில் நிற்கிறதோ, முரண்பாடுகளைக் கண்டு கூசி விலகாமல் எதிர் கொள்ளும் மன வலு நம்மிடம் என்று ஏற்படுகிறதோ, நம் வலு சிதறிக் கிடப்பதினால் பயனற்று இருப்பதை நாம் எப்போது உணருகிறோமோ, வெறும் இலக்கியமே நம் குறிக்கோள் என்பதை மீறி 'கருத்துலகம்' என்ற விரிவான பாதையில் என்று உலவுகிறோமோ, அன்றுதான் நம் விடிவு என்பது பிரக்ஞையின் கருத்து. இதில் கூட உடன்பாடில்லாமல் இருப்பவர் யாரும் உண்டா நம்மில்? அப்படிப்பட்டவர்கள் ஜீவனுள்ள அறிவுள்ள வர்களா?”

‘பிரக்ஞை' இலக்கியம் தவிர்த்த ஏனைய விஷயங்களில் அதிக அக்கறை கொண்டது. சமூக, கலை, பொருளாதாரச் சிந்தனைக் கட்டுரைகளை ( மொழிபெயர்ப்புகளை ) பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டியது. ‘சீனச் சிறப்பிதழ்' ஒன்றைத் தயாரித்தது.

‘பிரக்ஞை' அவ்வப்போது விரிவான ‘சுய விமர்சனம்' செய்து கொண்டது. இது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகவே காணப்பட்டது.

‘பிரக்ஞை' ஆர்வம் நிறைந்த ஒரு குழுவினரால் இயக்கப்பட்டது. பல வருட காலம் அதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர் ஆர். ரவீந்திரன்.

48 வது (மார்ச் 1978) இதழில் பிரக்ஞை இந்த அறிவிப்பை வெளியிட்டது :

“அக். 74-பிப். 78 கால இடைவெளியில் பல சுருக்கமான, தெளிவான தலையங்கங்கள் தனித்தன்மையும், பார்வைக் கூர்மையும், மொழி எளிமையும் கொண்ட திரைப்பட விமர்சனங்கள், பத்திரிகையின் மீதான விவாதங்களில் எழுப்பிய நுட்பமான கேள்விகள், வெளிப்படுத்திய கருத்துக்கள், மேலும் ஒரு சிறு பத்திரிகையின் அத்தியாவசியத் தேவையான, எதிர்பலனேதும் எதிர்பாராத உழைப்பு ஆகிய பல வழிகளில் ‘பிரக்ஞை' க்கு வலுவூட்டிய திரு. ஆர். ரவீந்திரன் சொந்தக்