பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

வல்லிக்கண்ணன்


ஒரு கடிதம் 3 பக்), 'கலைஞனும் கோட்பாடும்'- தருமு ஔரூப் சிவராம் கட்டுரை (2 பக்.) உமாபதி, ராஜமார்த்தாண்டன் கவிதைகள். இவ்விஷயங்களோடு முதலாவது இதழ் திருப்திகரமாகத்தான் அமைந்திருந்தது.

1977-ல் ஒரே ஒரு இதழைத்தான் வெளியிட முடிந்திருக்கிறது. 1978-ன் 1-ம் இதழில், "கொல்லிப்பாவை ஐந்து இதழ்கள் வெளிவந்திருக்க வேண்டும். இரண்டுதான் வெளிவந்துள்ளது. இந்த ஒழுங்கின்மை, காலதாமதம் இனியும் தொடராதவாறு இதழை வெளிக் கொண்டுவர மேற்கொண்ட வேளையில் இலக்கிய நண்பர்கள் சிலரின் ஒத்துழைப்பு கிடைத்தது” என்று ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது ஆண்டு முதல், கொ. பா. குமரி மாவட்டம் இடையன் விளை என்ற ஊரிலிருந்து வரத்தொடங்கியது. இவ் ‘இலக்கிய நண்பர்கள்' ஒத்துழைப்பு காரணமாகப் பத்திரிகையின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதைப் பின்னர் கவனிப்போம். முதலில், ராஜமார்த்தாண்டனின் லட்சியங்கள் பற்றிய அறிவிப்பை நினைவுகூர வேண்டும்:

“கொல்லிப்பாவையின் வெளிப்பாட்டினால் தமிழிலக்கிய இயக்கத்தில் பெரியதொரு மாறுதலை ஏற்படுத்திவிட முடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட இதற்கென்று சில லட்சியங்களும் இல்லாமல் இல்லை.

நாவல் இலக்கியம் ஒரு நூற்றாண்டையும், சிறுகதை, புதுக் கவிதை வரலாறு அரை நூற்றாண்டையும் தாண்டிவிட்டது. ஆண்டிலும் அளவிலும் மட்டுமின்றி தரத்திலும் இவ் இலக்கியத் துறைகளில் வளர்ச்சி உண்டு. ஆனால் இவற்றோடு இணைந்து வளர வேண்டிய விமர்சனத் துறை மட்டும் இன்னும் அரிச்சுவடி நிலையிலேயே தடுமாறிக் கொண்டிருக்கிறது. அன்று தொடங்கி இன்று வரை இலக்கியம் பற்றிப் பேசியதெல்லாம் பொழிப்புரைகள். ஆகா-ஓகோ என்ற பாராட்டுக்கள், தூக்கி எறிதல்கள் தானே? இது தவிர்த்து உருப்படியாக, விமர்சன ரீதியாக, என்ன சாதித்திருக்கிறோம்? எல்லோருமே ஒரு உயர்ந்த பீடத்திலிருந்து ‘கருத்துக்க'ளைத் தாராளமாக உதிர்க்கிறோம். 'இது தரமானது, இவர் அவருக்கு இணை' என்று முடிவுகளை அடைவதற்கான காரணங்கள் என்ன, இலக்கியம் பற்றிய- நவீன இலக்கியப் போக்கின் தரம், சாதனை, கொள்கை குறித்த-நமது பார்வை, மதிப்பீடுகள் 65 6 ? சிற்சில முயற்சிகள் அங்கங்கே தென்பட்டாலும் மொத்தப் பார்வையில் வெறும் அபிப்பிராயங்களும், பட்டியல்களும்தான் விமர்சனம் என்ற போர்வையில், இந்த நிலை மாற, விமர்சனமும் இலக்கியமாக, இலக்கிய