பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

119


அக்கறை கொண்ட விமர்சனப் பார்வைகள் வளர ஒரு களம் அமைத்துச் செயல்பட வேண்டும் என்பது 'கொல்லிப்பாவை' யின் நினைப்பு இதனால் புதிய படைப்புகள் புறக்கணிக்கப்படும் என்றாகாது . படைப்பும் விமர்சனமும் இணைந்து வளர்வதுதானே ஆரோக்கியமான இலக்கிய இயக்கமாகும்). கூடவே, இன்னும் சவலைப்பிள்ளையாகவே கிடக்கும் நாடக இலக்கியம் பற்றியும் அக்கறையுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு. இந்த நினைப்புகள் நடப்பாக, தொடர்ந்து இலக்கியப் பிரக்ஞையுடன் புதிய சோதனை முயற்சிகளுக்கு ஒரு களமாக 'கொல்லிப்பாவை’ செயல்பட படைப்பாளிகள்-வாசகர்கள் ஒத்துழைக்க வேணும்.”

நல்ல லட்சியங்கள்தான். ஆனால், 'கொல்லிப்பாவை' க்கு உரிய முறையில் சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதை அதன் இதழ் ஒவ்வொன்றும் நிரூபித்தது.

வெங்கட்சாமிநாதன், அவர் இயல்புப்படி, சில கருத்துக்களைக் கூறி, அவற்றை விளக்கும் வகையில் சிறு பத்திரிகைகள், சில எழுத்தாளர்களது போக்குகளைச் சாடி பல பக்கக் கட்டுரைகள் எழுதினார். தருமு சிவராம் உடனேயே வெ. சா. க்கு எதிர்ப்பாகவும், தனது பெருமைகளை எடுத்துக் கூறியும் நீண்ட நீண்ட கட்டுரைகள் எழுதுவதும் சகஜமாயிற்று. ஞானக்கூத்தன் அவர் போக்கில் கருத்துக்கள் தெரிவிப்பதும் (உ-ம்; 'பட்டுக் குஞ்சல் மரியாதை' ), சிவராம் (பட்டுக் குஞ்சல் சுயமரியாதை' என்று எதிர்க்கட்டுரை எழுதுவதும், பாதிக்கப்பட்ட தமிழவன் தனது கோணத்தில் கட்டுரைகள் எழுதுவதும், இவை போன்ற பக்க வீணடிப்புகளுக்கெல்லாம் 'கொல்லிப்பாவை’ இடமளிப்பதும் தவிர்க்க இயலாத நியதியாயிற்று.

தருமு சிவராம் எழுத்துகளுக்கு கொ. பா. அதிக இடம் அளித்துள்ளது.

‘கொல்லிப்பாவை'யின் இந்தப் போக்கு அதன் வாசகர்களுக்கு அதிருப்தியே தந்தது. அவ்வப்போது சிலர் தங்கள் அபிப்பிராயங்களை எழுதியிருக்கிறார்கள். மதுரை ரசிகர் ஒருவரின் ( எஸ். டி. லஷ்மணன் ) கருத்து சரியான விமர்சனமாகக் காணப்படுகிறது.

“கொல்லிப்பாவையை ஆரம்பத்திலிருந்து பார்க்கும்போது, உருப்படியானவையாக ந. முத்துசாமியின் 'தெருக்கூத்து', கிருஷ்ணன்நம்பியுடைது ஒன்று, கி. ராஜநாராயணன், அழகிரிசாமி பற்றி எழுதிய கட்டுரை, வெ. சா. வின் 'இரண்டு தலைமுறைகளுக்கிடையில்’, பதிலான சுந்தர ராமசாமி