பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வல்லிக்கண்ணன்


பெரிய பெரிய பத்திரிகைகளே பரிதாபப்படும்படியான நிலையில் அலட்சியமாகவும் அக்கறையில்லாமலும் போட்டு வைக்கப்பட்டிருக்கிற பெரிய நூல் நிலையங்களில் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு மூலையில்கூடச் சிறு இடம் பெறாதது வியப்புக்கு உரிய விஷயம் இல்லைதான். இந்நிலையில், ‘சிறு பத்திரிகைகள்' அங்கே சேகரித்து, பாதுகாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் நினைப்பேயாகும்.

இருப்பினும், என்னால் இயன்றதைச் செய்யலாமே என்றுதான் இம்முயற்சியில் ஈடுபடுகிறேன்.