பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

வல்லிக்கண்ணன்


கலாச்சாரத்திற்கு எதிராக ஆரோக்கிய கலாச்சாரத்தை நிறுவுவதாகச் சொல்லிக்கொள்ளும் சிறுசிறு அறிவுஜீவிக் குழுக்களும் சாக்கடையில் நின்று மலேரியா ஒழிப்பு பற்றிப் பேசிக்கொண்டிருப்பது நம் கலாச்சாரத்தின் போலிமை என்றும்,

காரமாகக் கருத்துக்களை அறிவித்திருக்கிறார்கள் கட்டுரையாளர்கள்.

‘மனுஷ வமிசத்தையே தினம் தினம் இழிவுபடுத்தும் செயல்கள், வெகுஜன சீரழிவுக் கலாசாரத்தைச் சுமந்து வரும்-காசு பணத்திற்காகப் பத்திரிகை விபச்சாரம் செய்து வரும் பத்திரிகைகளில் நடந்து வருகிறது. இதற்காக இதுவரை மனுஷ வமிசம் கோபப்படாமல் 'அதில் சுகம் கண்டு கொண்டே வந்திருக்கிறது'.

இவ்விதம், தற்கால நிலைகளைக் கண்டு கோபமும் ஆத்திரமும் கொண்ட மனங்களின் எழுத்துக்களை விழிகள் தாங்கி வந்தது.

‘கல்வி மதிப்புகளின் சீரழிவு குறித்து கவலைப்படுகிறவர்களுக்காக இது' என்று அவ்வப்போது கட்டுரைகள் வந்தன. பல்கலைக்கழக மட்டத்திலும், கல்வித்துறையிலும் நிலவுகிற சீரழிவுகளையும் குறைபாடுகளையும் அவை குத்தலாகவும், உதாரணங்களோடு விரிவாகவும் பேசின.

தமிழ் சினிமாப் படங்களைப் பரிகசிக்கும் சிறுசிறு விமர்சனங்களை 'விழிகள்' வெளியிட்டது. உதாரணத்துக்குச் சில-

பஞ்சவர்ணம்- வசனம், பாடல்கள் நா. காமராசன். இவரைவிட குயிலன், புரட்சிதாசன்கள் புத்திசாலித்தனமாக எழுதுகிறார்கள். ஒரு படம் எப்படி எடிட் செய்யக்கூடாது என்பதற்கும், எப்படி உரையாடல் எழுதக்கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் நடிக்கக் கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது என்று படிப்பதற்கும் இந்தப் படம் உதவும்.

சகலகலா வல்லவன்- முரட்டு ராஜா, போக்கிரி ராஜாவைத் தொடர்ந்து, கமலைக் கோமாளியாக்க ஏவி. எம். எடுத்த மசாலா. தமிழ்ச் சூழலில் இந்த எளவு தான் விலை போகிறது.

எங்கேயோ கேட்ட குரல்-தாலி கட்டிய பெண் கணவனை விட்டு இன்னொருத்தனுடன் ஓடுகிறது என்பது தமிழ்ப் படத்துக்குப் புதுசு. ராதாவின் 'மார் ஆட்டி' டான்சும் மற்ற மசாலாக்களும் உண்டு. ரொம்ப நாட்களுக்குப் பிறகு மாமா அத்தை அத்தான் இந்த நெருக்கங்களைக்