பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

வல்லிக்கண்ணன்


மாதப் பத்திரிகை ஓரளவு கவனிப்பைப் பெற்றிருந்தது. ஆயினும் குறுகிய காலமே வாழ்ந்தது.

இப்படி, வெற்றி பெறாத பல முயற்சிகளுக்குப் பிறகு சென்னையில் 'சரஸ்வதி' தோன்றியது. 1955 ல், ஆசிரியர் : வ. விஜயபாஸ்கரன். இலக்கியப் பத்திரிகை என்ற தன்மையில் பல சாதனைகள் புரிந்து, தனக்கெனத் தனி வரலாறு படைத்துக் கொண்ட சரஸ்வதி ஏழு வருடங்கள் நடந்தது (இப் பத்திரிகை குறித்து இத் தொடரில் முன்பே எழுதப்பட்டு விட்டது).

தொ. மு. சி. ரகுநாதன் 'சாந்தி' என்ற பெயரில் முற்போக்கு இலக்கியப் பத்திரிகை ஒன்றை நடத்தினார். 1955- ல் திருநெல்வேலியிலிருந்து வெளிவந்த இம் மாசிகை ஒரு வருடமும் சில மாதங்களுமே உயிரோடிருந்தது. விந்தன் நடத்திய 'மனிதன்' என்ற மாசிகையும் முற்போக்கு இலக்கிய இதழாகவே வந்தது.

'சரஸ்வதி' நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இலக்கியப் பத்திரிகையாக ப. ஜீவானந்தம் 'தாமரை' யைத் துவக்கி வைத்தார்.