பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



27. தாமரை


'தாமரை' 1958-ல் பிறந்தது. ஆசிரியர் : ப. ஜீவானந்தம் 'மாஜினி' துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

‘ஜீவா' வின் பாரதி இலக்கிய ரசனையும், பழம் தமிழ் ஈடுபாடும் தாமரை கட்டுரைகள் வாயிலாக நன்கு வெளிப்பட்டன.

முற்போக்கு இலக்கியத்தின் தன்மைகளை விளக்கும் கட்டுரைகளும், அந்த அடிப்படையில் எழுதப்பெற்ற கதைகளும் கவிதைகளும் பிரசுரமாயின.

ஜீவானந்தத்துக்குப் பிறகு மாஜினி பத்திரிகைப் பொறுப்பை நிர்வகித்தார். பின்னர், 1960 களில் தி. க. சிவசங்கரன், ஆ. பழநியப்பன், எம். கே. ராமசாமி ஆகிய மூவரைக் கொண்ட 'ஆசிரியர் குழு' தாமரையை வளர்க்கும் பணியை ஏற்று நடத்தியது.

இவர்களது ஆசிரியப் பொறுப்பு பத்து வருட காலம் நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் 'தாமரை' இலக்கியவாதிகளின் கவனத்தை வெகுவாய்க் கவர்ந்தது.

உலக இலக்கியங்களின் வளர்ச்சி, அண்டை மாநிலங்களில் வளரும் இலக்கியப் போக்குகள், சோவியத் ரஷ்யாவின் புதிய இலக்கியப் படைப்புகள் ஆகியவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தது தாமரை.

இதற்கென்றே சர்வதேச சிறுகதை மலர், (இந்திய) அயல்மொழிச் சிறுகதைச் சிறப்பிதழ் என்று அவ்வப்போது விசேஷத் தயாரிப்புகளை ஆசிரியர் குழுவினர் உருவாக்கினர்.

தமிழ்நாட்டின் இலக்கியப் படைப்பாளிகளது சிறுகதைகளைச் சேகரித்து சிறுகதைச் சிறப்பிதழ்கள் வெளியிட்டார்கள். வட்டார இலக்கிய வளர்ச்சியை அறிமுகப்படுத்தும் வகையில் 'கரிசல் இலக்கிய மலர்' தயாரித்தார்கள்.

விமர்சனக் கட்டுரைகளைச் சேகரம் செய்து வெளியிடுவதில் இக்காலக்கட்டத்திய தாமரை அதிக அக்கறை காட்டியது. மணிக்கொடி