பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

173


க. பாலசுப்பிரமணியன்' என்று திருச்சி விலாசம் அச்சிடப்பட்டிருந்த போதிலும், சகல தொடர்புகளுக்கும் கலாமணி என்ற எழுத்தாளரின் சென்னை விலாசம்தான் கொடுக்கப்பட்டது.

'ஏதோ, உலகைப் புரட்டிவிடுகிற ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடித்துவிடுவோம் என்கிற பிரமை எங்களுக்கில்லை. ஆனால், அத்தகைய ஒரு பெரிய காரியத்துக்குத் தூண்டுகோல்களாய் இருக்க முடியும் என்கிற சிறிய நம்பிக்கை எங்களுக்கு நிறைய உண்டு.

வியாபார ரீதியில் இதை ஒரு பத்திரிகை ஆக்குவது எங்கள் நோக்கமல்ல. எண்ணற்ற புதிய இளம் தலைமுறை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து இலக்கிய உலகில் ஒரு புதிய சகாப்தத்திற்கான முன்னுரையை எழுதிவிட வேண்டும் என்பதுதான் எங்களின் இதயத் துடிப்பு'

இவ்வாறு 'ப்ரிய நெஞ்சங்களே' என விளித்து அறிமுகவுரை எழுதிய நண்பர்கள் தங்களைப் பற்றித் தன்னம்பிக்கையோடு நாவலித்த வரிகள் இவை_

'ஒரு சகாப்தம் தொடங்கிவிட்டது !

நாங்கள். . .

நிழல்களின் வசீகரங்களிலேயே மூழ்கிக் கிடக்கும் கனவுலகப் பிரஜைகள் அல்ல.

நிஜங்களின் போராட்டங்களை- அதன் நியாயங்களை கவிதாலங்காரத்தோடு பாடுகின்ற மண்ணின் புத்திரர்கள்-மக்களின் பிரதிநிதிகள்.

இளம் உள்ளங்களில் விஷம் துவும் நசிவு இலக்கியத்தின் எதிரிகள் !

அத்தகைய காமசூத்திரப் படைப்புகளைக் கலாகோபத்தோடு விமர்சிப்போம். சமூகக் கொடுமைகளை, அதன் சீரழிவுகளை, கவித்வ ரோஷத்தோடு கடுமையாய்ச் சாடுவோம்.

முகாரிகளின் மூல காரணங்களை எடுத்துச் சொல்லி, நீலாம்பரியில் நித்திரை புரியும் நெஞ்சங்களைத் தட்டியெழுப்புவோம்

எங்க ள் இதய வீணையின் இன்றைய ராகங்கள், நாளை பொன்னுலகின் விடியலில் பூபாளமாய் எதிரொலிக்கும் !