பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. யாத்ரா


சிறு பத்திரிகைகளிடையே மிகத் தனித்தன்மை பெற்ற பத்திரிகை ‘யாத்ரா.‘

யாத்ரா முதல் இதழ் 1978 ஆகஸ்டு மாதம் வெளிவந்தது. 'கலை சார்ந்த கருத்துக்களுக்கேயான களன்' என்று அறிவித்துக் கொண்ட இம் மாதப் பத்திரிகையின் நோக்கம் இதுவெனப் பிரசுரிக்கப்பட்டது.

'பலதரப்பட்ட பார்வைகள், கருத்துக்கள், அபிப்பிராயங்கள், நேர் எதிர் எதிர் கோணங்களிலிருந்து வருபவைகூட வரவேண்டும்-அவற்றை சகஜமாக எதிர்கொள்ளும் ஒரு ஆரோக்கிய கருத்துலகச் சூழல் உருவாக வேண்டும். பாதகமான கருத்துக்களைக் கண்டு உட்சுருங்குவதோ அவை வெளிவராதவாறு கோபப்படுவதோ சாதகமாகக் கருத்துக்களை எதிர் நோக்கி கையேற்றுவதோதான் இன்றைய நிலை. இது மாறவேண்டும்.’

ராமநாதபுரம் மாவட்டம், திருச்சுழி அஞ்சல், பண்ணை மூன்றடைப்பு என்ற இடத்திலிருந்து பிரசுரம் பெறுவதாக அறிவித்த 'யாத்ரா' வின் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினர் யார் என்று வெளிப்படையாகச் சொன்னதில்லை.

‘யாத்ரா ஒரு குழுவினரது முயற்சி, குழுவில் தனித்தனியாகவும், கூட்டாகவும் பலர் பல பொறுப்புகளை ஏற்பார்கள். இது கூட்டுப் பொறுப்பு. தனியாகவும், கூட்டாகவும் யார் செய்யும் எதற்கும், குழு முழுதுமே பொறுப்பு. எந்தக் குழுவினதும், ஸ்தாபனத்தினதும், இயக்க செயல்பாட்டு முறை இதுவே. எனவே, பாதகமாகவோ, சாதகமாகவோ யாரும் எதிர்கொள்ள வேண்டியது. இக் குழுவின் எந்தச் செயலையும், குழுவின் கூட்டுச் செயலாகத்தான் எவ்விதமாகவும் எதிர்கொள்ளும் உரிமை. பாதகமாகவோ, சாதகமாகவோ, ஆதாரத்தோடு, ஆத்மார்த்தமாக, எதிர்கொள்ளும் உரிமை சமூகத்தில் உள்ள எல்லோருக்கும் உண்டு. அதைவிடுத்து இதைச் செய்தது இவனாக்கும், அதைச் செய்தது அவனாக்கும் என்றே வம்பு செய்து கொண்டு, தனிப்பட்ட ஒரு நபர் எவரிடமும் உள்ள தன் பகைமைக் காய்ச்சலை, பொறாமையை-துவேஷத்தை வெளிப்படுத்தும் முகாந்திரமாக, அதைச் சாக்கிட்டு,