பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

வல்லிக்கண்ணன்


பெறாமலே டிசம்பரில் திடீரென்று 44-45-46 என்ற எண்களைத் தாங்கி ஒரு இதழ் வந்துள்ளது.

ஓவியர் ஆதிமூலம் தீட்டிய சித்திரம் ஒன்றை அட்டைப் படமாகக் கொண்ட இந்த இதழ் தமிழ் அறிஞர் திரு. வி. க. பற்றிய சிறப்பிதழாக விளங்குகிறது.

'மற்றுமோர் காந்தி' என்ற தலையங்கம். 'திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள்' நூலிலிருந்து பல தகவல்கள், 'பின்னோக்கிய மறுபார்வையில் திரு. வி. க.' என்று செ. ரவீந்திரன் எழுதிய கட்டுரை ஆகியவை திரு. வி. க. வை நன்கு புரிந்து கொள்வதற்கு உதவக் கூடியன.

மற்றும்—

'பரதநாட்டியம்—இன்றைய சில பிரச்னைகள் குறித்த ஒரு பேட்டி’ (1973ல் வெங்கட்சாமிநாதன் கேட்ட கேள்விகளும், அம்பை தந்த பதில்களும் ) 13 பக்கங்கள்.

‘கூத்துப் பட்டறையின் ஒரு சமீபத்திய நாடகம்' என்ற தலைப்பில் ‘நிஜங்கள் என்னும் நாடகத்தைப் பற்றி கே. எஸ். ராஜேந்திரன் எழுதிய கட்டுரையும், அதே நாடகம் குறித்து ஞான இராசசேகரன் அபிப்பிராயமும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.

அடுத்து வரும் இதழ்களில்...

பின்னோக்கிய மறு பார்வையில்— மயிலை சீனி. வேங்கடசாமி, நா. ரகுநாதன் (ரஸிகன்); க. கைலாசபதி... சிறப்பிதழ்கள், பரதநாட்டியம், ரிச்சர்ட் ஷெக்னர்; கிராம மக்களிடையே, புது சினிமா—ஒரு ஆராய்வு’ என்றும் யாத்ரா அறிவித்திருக்கிறது.

இந்த இதழிலும் 'சக யாத்ரிகர்களுக்கு' பொறுப்பை உணர்த்தும் விதத்தில் சில கருத்துக்களை யாத்ரா அறிவுறுத்துகிறது. அதில் ஒரு முக்கிய பகுதி இது :

'இந்தப் பத்திரிகையினை நடத்திக் கொண்டிருக்கும் எங்களுக்கு எவ்வளவு பொறுப்பு தேவையோ அதே அளவு இந்தப் பத்திரிகையினைப் படிப்பவர்களுக்கும் இப்பத்திரிகையைப் பற்றிய பொறுப்பும் அக்கறையும்