பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. மணிக்கொடி

காரைக்குடியிலிருந்து 1930 களில் 'ஊழியன்' என்ற பத்திரிகை வந்து கொண்டிருந்தது. 'ராய. சொ.' அதன் ஆசிரியர் ( ராய. சொக்கலிங்கம் அவரது முழுப் பெயர்). பெரிய அளவில் நடந்து கொண்டிருந்த பத்திரிகை அது. பத்திரிகையின் சைசும் பெரிதுதான்.

ஈ. சிவம் என்பவர் 'ஊழியன்' துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஒரு சந்தர்ப்பத்தில், புதுமைப்பித்தன் 'ஊழியன்' பத்திரிகையில் வேலை பார்ப்பதற்காகப் போய்ச் சேர்ந்தார். ஆனால், சீக்கிரமே சென்னைக்குத் திரும்பிவிட்டார். 'ஏன் ஊழியன் வேலையை விட்டுவிட்டீர்கள்?' என்று நண்பர் கேட்டபோது, ஈ. சிவம் எறும்பு சிவம் ஆக அரித்துப் பிடுங்கிவிட்டார். என்னால் ஊழியனில் வேலை பார்க்க முடியவில்லை' என்று டி. பி. சொன்னார்.

ரகுநாதன் எழுதிய 'புதுமைப்பித்தன் வரலாறு' நூலில் இத்தகவல் காணப்படும்.

கு.ப. ராஜகோபாலனும் சில பத்திரிகைகளில் பணிபுரிந்து பார்த்தார். ந. பிச்சமூர்த்தி அந்தக் காலத்திய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார். இப்படி, ஆர்வமும் உற்சாகமும், உழைப்பும் ஊக்கமும் பெற்றிருந்த எழுத்தாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற தகுதியான ஒரு அரங்கத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு, தக்க தருணத்தில் காலம் அமைத்துக் கொடுத்த இலக்கிய அரங்கம் ஆயிற்று, கதைக் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட * மணிக்கொடி' என்ற மாதம் இருமுறை வெளியீடு.

அரசியல் மற்றும் சமூக விஷயங்களுக்கும், கட்டுரைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்த 'மணிக்கொடி' வாரப் பதிப்பு 1935 ஜனவரியில் நின்று விட்டது. பி. எஸ். ராமையா தீவிரமாக முயன்று, 1935 மார்ச் மாதம் முதல் 'மணிக்கொடி'யை மாதம் இருமுறை பத்திரிகையாகக் கொண்டு வந்தார்.

மணிக்கொடி வார இதழ் பெரிய அளவில் வந்து கொண்டிருந்தது. கதைப் பத்திரிகை புத்தக வடிவம் ஏற்று, { டிம்மி சைஸ், கலைமகள்