பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

193


சோர்ந்து டிக்கடை பெஞ்சில் சாய்ந்து சுடுநீர் குடிக்கும் சகோதரர்கள். மாலைக் காற்று விரட்டிய கோடைச் சருகுகள்போல வீடு நோக்கி ஓடும் என். ஜி. ஓ. தோழர்கள் ஆகியோர்களிடமும் அவர்களது கனவு வேரூன்றி, முளைத்துக் கிளைத்துச் செழித்து வளர்ந்து பயன் தர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

பொறுப்பாசிரியர்—அ. இராஜேந்திரன், ஆசிரியர் செந்தில் ஆசிரியக் குழு—பொன்னீலன், ஜெகன், தாமரை நடராசன், க.பிரம்மநாயகம், அருண் பாஸ்கர் என்று ஒரு ஆரோக்கியமான கூட்டுறவில் புதிய வானம் நன்றாக வளர்ந்தது.

இக் குழுவினரும், குமரி மாவட்டத்தில் உள்ள எழுத்தார்வம் கொண்ட இளைஞர்களும் பல முற்போக்குப் பத்திரிகைகளிலும் எழுதி வந்த பற்பலரும் புதிய வானத்தில் கவிதைகள், கதைகள் எழுதினார்கள். கவிதைகளே அதிகம் இடம் பெற்றுள்ளன.

விமர்சனத்திலும் புதிய் வானம் அக்கறை காட்டியது. அவ்வப்போது சில புத்தகங்களுக்கு ஆய்வுரை எழுதியது. கவிமணியின் கையறு நிலைப் பாடல்கள் என்ற ஒப்பியல் திறனாய்வுக் கட்டுரையைத் தொடர்ந்து வெளியிட்டது. நாட்டுப் பாடல்களைச் சேகரம் செய்து இதழ் தோறும் பிரசுரித்து வந்தது.

சமுதாயப் பார்வையோடு கதைகள், கவிதைகள் எழுதவேண்டும் என்ற முற்போக்கு இலக்கிய உணர்வை அது இளைஞர்களிடம் தூண்டி விட்டது. புதிது புதிதாகப் பலர் எழுதலானார்கள். புதிய வானம் போன்ற வெளியீட்டைப் பிரசுரிக்கும் முயற்சியும் இதர சில அணியினரிடையே தலைதுாக்கியது.

இதெல்லாம் புதிய வானம் நண்பர்களுக்கு மகிழ்ச்சி தந்தது. ஆனாலும், அவர்கள் தங்கள் சுயவிமர்சனத்தில் ஒரு உண்மையைச் சிந்திக்கத் தவறவில்லை.

புதிய வானம் இலக்கிய ஏடு என்ற வகையில் தர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றாலும் உழைக்கும் மக்களின் கரங்களிலும் அது திகழ வேண்டும் அவர்களின் வாழ்வுப் பிரச்னைகளை, அணுகு முறை தெளிவினை அது ஏற்படுத்த வேண்டும், சமுதாயத்தின் பிற் போக்குத்தனங்களை இனஞ்சுட்டி, முற்போக்கு முனைப்பினை ஏற்படுத்த வேண்டும் என்றெல்லாம் நமது ஆசைகளை வெளியிட்டோமே; அவைகள் எந்த அளவிற்கு நிறைவேறியிருக்கின்றன என்பதை நின்று நிதானிக்க வேண்டியிருக்கிறது என்ற ஆசிரியக் குறிப்பு அதன் 9-ம் இதழில் காணப்படுகிறது.