பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

203


பண்பாடும் ( த. அகர முதல்வன் , மனம் வெளுக்க வேண்டும் ! ( சக்திக் கனல் ), பாரதியின் கடவுள் கொள்கை (பாரதிப் பித்தன்) பாரதி என்னும் பொதுவுடமைவாதி, பாரதியின் சமுதாய எதார்த்தப் பார்வை, பாரதி வழியில் தமிழ்க் கவிதை என்ற தலைப்புகளில் பாரதி படைப்புகள் குறித்த பல்வேறு பார்வைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கடைசி மூன்று கட்டுரைகளை ஆ. செகந்நாதன் எழுதியிருந்தார். இவை தரமான ஆய்வுகள் ஆகும். மூன்றாவது கட்டுரையில் பாரதிக்குப் பின் வந்த தமிழ்க் கவிஞர்களை விரிவாகவும், விருப்பு வெறுப்பற்ற நோக்குடனும் அவர் விமர்சித்துள்ளார். அவருடைய முடிவுரை சிந்தனை ஒளி கொண்டது; சிந்திக்கத் தூண்டுவது.

அந்தப் பகுதி இது தான்

‘பாரதிக்குப் பின்னர் தமிழ்க் கவிதைகள் பெருகியுள்ளன என்பதில் மறுப்பில்லை. பாரதி தனக்கு முன்னர் இருந்த பிற்போக்குத்தனங்களை யெல்லாம் விட்டுவிட்டுப் புதுமைகளைப் படைத்தான். பாரதியின் கவிதைகளை மூன்று முக்கியமான தன்மைகளுக்காகப் போற்றுகிறோம்.

1. சமுதாய மாற்றங்களை வரவேற்ற முற்போக்குத்தனம். 2. பாரதியின் உணர்வோடு இயைந்த உண்மைத்தன்மை. 3. இனிமையும் எளிமையும்.

இம் மூன்று தன்மைகளும் ஒருங்கே நிலவும் கவிதைகளை வேறு யாரிடமும் காண இயலவில்லை என்பது அவநம்பிக்கையால் எழுந்த முடிவல்ல. பாரதிக்குப் பின் வந்தோர் பலர் முற்போக்குத்தன்மை, எளிமை, இனிமை ஆகியவற்றில் பாரதிக்கு வாரிசுகளே. ஆனால் அரசியல் கட்சிச் சார்பு, வயிற்றுப் பிழைப்பு உத்தியோகம் ஆகியவற்றால் விளைந்துள்ள சந்தர்ப்பவாதப் போக்கும் அச்சமும் அவர்களை முடக்கி விட்டன. பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, முடியரசன் ஆகியோரின் கவிதைச் சாதனைகளை ஒடுக்கியது கட்சிச் சார்புகளே. மேத்தா, மீரா, சிற்பி, புவியரசு, தமிழன்பன் என்று நீளும் பட்டியலும் ஒரு மகாகவியின் உதயத்தைத் தடுப்பவை, உத்தியோகம் விளைவிக்கும் அச்சமும் ஜாக்கிரதை உணர்ச்சியுமே.

அச்சமே நரகம் அதனைக் கட்டு
நல்லதை நம்பி நல்லதே செய்க

என்றான் பாரதி, அச்சத்தை வென்றவர்கள் தங்களைப் பாரதியின் வாரிசுகளாகக் கூறிப் பெருமிதமுறலாம். தன்னம்பிக்கையோடு அப்படிப்