பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

வல்லிக்கண்ணன்


மிகச் சிறந்த படைப்புகளை நண்பர்கள் அனுப்பினால் மகிழ்ச்சியோடு அதற்கு முதலிடம் தருகிறோம்.

இது பாட்டாளிகள் ஏடல்ல. படிப்பாளிகளுக்கான ஏடு. படைப்பாளிகளின் பாலம்.

மனித வரலாற்றில் தத்துவப் போராட்டம் நிலையானது. இது, அக, புற வயப் பார்வை முரண்பாடுகளின் மோதல்களை அடிப்படையாகக் கொண்டது.

சர்வதேச ரீதியாகத் தொடர்ந்து ஏற்படும் அரசியல், பொருளாதார, கலாச்சார மாற்றங்கள் ஒவ்வொரு அமைப்பையும் பாதிக்கிறது.

மிக நீண்ட இலக்கியப் பாரம்பரியமுள்ள தமிழ் அஞ்சி, ஒடுங்கி தாக்கங்களிலிருந்து தப்பி ஒளிந்து, ராஜா ராணிக் காலத்துக் கனவுலகிலே வாழ்ந்துவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது முடியாத காரியம்.

அங்கங்கே பல உலகத் தாக்கங்களை ஏற்படுத்த வேண்டியது புத்தியுள்ள தமிழனின் கடமை.

இந்த நோக்கத்தோடு புதிய காற்று வீசுகிறது. உலக இலக்கியங்களையும், தரமான சுய படைப்புகளையும் அறிமுகம் செய்யும் களமாக இது அமையும் ( புவியரசு ).

‘காற்று' தரமான நாடகம், கவிதை, கதைகளைப் பிரசுரித்தது. ‘இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை' வெளிவரும் என்று திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அப்படி அது வரவில்லை. எப்பவாவதுதான் வந்தது. வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இதழ் என்ற ரீதியில் இதுவரை சில இதழ்கள் வந்துள்ளன.

'தேடல்' திருநெல்வேலியில் தொடங்கப்பட்டது. ஆசிரியர்— ஜோதி விநாயகம். இவர் விமர்சன உணர்வை வலியுறுத்தும் நோக்குடன் இந்த இதழை ஆரம்பித்தார்.

'ஆங்கிலத்திலும் பிறமொழி இலக்கியங்களிலும் வந்திருக்கிற மரபுத் தொடர்ச்சியான நூல்களைப் பற்றி பலகோணங்களிலும் நின்று பார்க்கிற கட்டுரைகளும், அவை தொகுக்கப்பட்ட புத்தகங்களும் உண்டு. ஷேக்ஸ்பியர் பற்றின விமர்சனப் புத்தகங்களின் பட்டியலே ஒரு கல்லூரி நூலக விபரப் பட்டியலில் ஏழு பக்கம் வருகிறது. இங்கு நாம் தேர்ந் தெடுத்துக் குறிப்பிடுகிற புதுமைப்பித்தன், மெளனி, கு. ப. ரா; ந. பிச்ச மூர்த்தி, க. நா. சு. சி. சு. செல்லப்பா, லா, ச. ரா. தி. ஜானகிராமன்,