பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

209


வேண்டும். ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியில் நம்பிக்கை கொண்ட கவிஞர்கள் மட்டுமே தெளிவாக எழுத முடியும்.‘

ஆனாலும் இத்தகைய விமர்சனங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்படவில்லை.

1975 மே மாத இதழில் இலங்கைப் படைப்புகளுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ என்ற நாவல் விரிவாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

விடியல் ஐந்தாவது இதழ் (ஜனவரி 1976 ) முதல், மாதமிருமுறையானதுடன், தனது போக்கையும் மாற்றிக் கொண்டது. ‘துணுக்குகளைக் கோத்தாற் போன்ற ஒரு வித்தியாசமான பாணியில் விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறோம்‘ என்று இந்தப் போக்கைப் பற்றிய சிறு குறிப்பும் காணப்பட்டது.

பல நாடுகள் பற்றிய தகவல்கள், குறிப்புகள், வெளிநாட்டுத் தலைவர்கள் பற்றிய சிறு கட்டுரைகள் முதலியன பிரசுரமாயின. சிறு சிறு கவிதைகளும் இடம் பெற்றன. தரமான படைப்புகள் கிடைப்பது சிரமமாக இருப்பதே இதற்குக் காரணமாகும் என்று அறிவிக்கப்பட்டது.

உள்நாட்டுச் செய்திகளைவிட வெளிநாட்டுச் செய்திகளே அதிகம் தரப்பட்டுள்ளன. வெளிநாட்டுச் செய்திகளுக்குள்ள தனி வரவேற்பு கவனத்தில் கொள்ளப்படுகிறது. விடியல் இந்த மண்ணில் நின்று கொண்டுதான் உலகைப் பார்க்க விரும்புகிறது என்பது இங்கு தெரிவிக்கப்படுகிறது என்ற அறிவிப்பு எழுதவேண்டிய அவசியமும் விடியலுக்கு ஏற்பட்டது.

1976 ஏப்ரல் முதல் விடியல் வாரப்பத்திரிகையாக மாற்றம் கொண்டது. அரசியல் குறிப்புகள், அயல்நாட்டு விஷயங்கள், கேள்விபதில் பகுதி, உருவக் கதை—இவற்றுடன் மாணவன் எழுதிய குரல்கள் என்ற தொடர் நாடகமும் வெளிவந்தது. கலை இலக்கிய விவகாரங்கள், விமர்சனங்கள் முதலியன இடம் பெறவில்லை. இது குறித்து வாசகர்கள் குரல் கொடுத்ததும் உண்டு.

டாக்டர் கோவூர் பற்றிய ஒரு இதழைத் தயாரித்தது (இதழ்-16 ) விடியல். ‘தீ மிதித்தல், அலகு குத்திக் கொள்ளுதல், உடலில் கொக்கிகளை மாட்டிக் கொண்டு தொங்குகாவடி என கடவுளின் அருளால்’ செய்யப்படும் காரியங்கள் யாவும் கடவுட் செயல் அல்ல என்பதை விஞ்ஞான பூர்வமாக டாக்டர் கோவூர் வெளிப்படுத்துகிறார். கோவூரும் அவரைச்

த.14