பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

215


சாரமற்ற எழுத்துக்களைப் பிரசுரிக்க வேண்டிய நிலையிலேயே இருந்தன. கவனிப்புப் பெற்றிருந்த முற்போக்கு இலக்கியவாதிகளின் கதை, கவிதை கட்டுரைகள் அபூர்வமாக எப்போதாவது இச் சிற்றேடுகளில் தலைகாட்டு வது நடைமுறையாக இருந்தது.

1970 களில் தோன்றிய முற்போக்கு இலக்கியப் பத்திரிகைகளில் ‘ஜீவா‘ எனும் திங்கள் இதழும் ஒன்று. இதன் ஆசிரியர் ஏ. விஜயன். சிறப்பாசிரியர் கவிஞர் செவ்வியன்.

கம்யூனிஸ்டுத் தலைவர் ஜீவாவின் (ப. ஜீவானந்தம் ) நினைவை கவுரவிக்கும் வகையிலும், அவருடைய கொள்கையைப் பரப்பும் நோக்குடனும் இந்தப் பத்திரிகை வெளிவந்தது. ஜீவா பற்றிய கட்டுரைகள், குறிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. வழக்கமான பாணியில் கவிதைகள் மிகுதியாக இடம்பெற்றன. கவிஞர் திருச்சி தியாகராசன் தொடர்ந்து கவிதைகள் எழுதியதோடு, ‘பழந்தமிழ் இலக்கியத்தில் புரட்சிக் கருத்துக்கள்‘ என்றொரு கட்டுரை வரிசையும் எழுதி வந்தார். ‘பாரதிக்குப் பின் கவிஞர் வளர்ச்சி‘ என்ற தலைப்பில் விமர்சன அறிமுகம் அவ்வப்போது வெளியாயிற்று. இது மேலோட்டமான மதிப்பீடாக இருந்ததே தவிர, ஆழ்ந்த விமர்சனமாகவோ, முறையான ஆய்வாகவோ அமைந்ததில்லை. சினிமா விமர்சனக் கட்டுரைகளை டி. எஸ். ரவீந்திர தாஸ் எழுதினார். கேள்வி பதில் பகுதியை தா. பாண்டியன் கவனித்துக் கொண்டார்.

‘பாட்டாளி தோழன் என்றொரு பத்திரிகை சென்னையிலிருந்து பிரசுரமாயிற்று. ஆசிரியர்—டி. ஞானையா. ரசமான தகவல் துணுக்குகளை அதிகம் வெளியிட்ட இந்த இதழ் விறுவிறுப்பான கட்டுரைகளைப் பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தது. நக்சலைட்டின் சிறை அனுபவங்கள், இந்திய சுதந்திரம்—மறைக்கப்பட்ட வரலாறு போன்றவை உதாரணங்கள். வழக்கமான கதைகள், கவிதைகளும் உண்டு.

தேவகோட்டை சமூகச் சிந்தனை இலக்கியக் குழு ‘நாம்‘ என்ற மாத இதழை நடத்தியது. மக்களுக்குச் சிந்தனை விழிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் லட்சியமாக இருந்தது. அதன் நோக்கத்தை இவ்வரிகள் நன்கு எடுத்துக் கூறும் :

“இந்த முதலாளித்துவ அரசியலமைப்பை மாற்றினால் அல்லது இன்றைய படுமோசமான நிலைமை மாறாது என்பது விஞ்ஞானபூர்வ சமூகச் சிந்தனையாளர் முடிவு. ஆகவே, முதலாளித்துவப் பொருளாதார முறையை மாற்றி மக்கள் நலனுக்கான சோஷலிசப் பொருளாதார