பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

வல்லிக்கண்ணன்


முறையை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான அரசியல் சமுதாய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டில் உள்ள இடதுசாரி— ஜன நாயக அணியினர் ஒன்றுபட்டுச் செயலில் இறங்க வேண்டும். இடதுசாரிஜனநாயக அணிகளிலுள்ள கலாச்சாரப் பகுதிகளில் பத்திரிகைகள் இந்தச் செய்தியை முன்னுக்குக் கொண்டுவந்து முழக்க வேண்டும். நாட்டு நலனும், மக்கள் நலனும் நாசகரமாக வீழ்ச்சியுறுவதைத் தடுத்து, நல் வாழ்வைச் சமைக்க விஞ்ஞானபூர்வ சமூகச் சிந்தனையாளர்கள்—ஜன நாயகவாதிகள் அனைவரும் செயல்படுக “ (‘நாம்‘ ).

இதே நோக்குடன் கோவையிலிருந்து துளிகள் வெளிவந்தது, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தது. முற்போக்கு எண்ணங்களை எழுத்தாக்கும் தோழர்கள் சமுதாயப் பார்வையோடு கவிதைகளும், கதைகளும் எழுதி இப்பத்திரிகைக்கு உயிரூட்டி வளர்த்தார்கள். பாராட்டத்தகுந்த விதத்தில் ‘துளிகள்‘ ஒரு ஆண்டு மலரைத் தயாரித்தது.

கோவையிலிருந்து பிரசுரமான மற்றொரு இதழ், ‘இளைய கரங்கள்‘. ‘சமுதாய உறவுகள் பொருளாதாரத்தால் நிர்ணயிக்கப்படுவதால் வளர்ச்சி சிதைகிறது. இக்குறையை அறிவின் வளர்ச்சி ஒன்றாலேயே வெல்ல முடியும். அவ்வறிவினைப் பெற முயலும் எண்ணமே இளையகரங்களின் செயல்திட்டம். மனிதன் தான் படைத்த பணத்திற்குத் தானே அடிமையானால் மானிடத்தின் அழிவு தொடங்குகிறது என்று பொருள். அதைக் களைந்து புதிய பண்பாட்டு வளர்ச்சிக்கு வித்திட இளையோர் உலகம் தயாராக வேண்டும். கல்வி, சிந்தனை செயல்—இவை நமது பாதையாகட்டும் என்று அது வலியுறுத்தியது. இந்த அடிப்படையில் கட்டுரைகளையும் கதைகளையும் தயாரித்து வெளியிட்டது.

சேலத்திலிருந்து வந்த ‘ஜன்னல் பார்வை‘ என்ற இதழும் அறிவு விழிப்பு ஊட்டக்கூடிய சிந்தனைக் கட்டுரைகளை வெளியிட்டது. இதில் த. ராசு எழுதிய கட்டுரைகள் சிந்திக்கத் தெரிந்தவர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்திருந்தன. மகாகவி பாரதியாரின் வாழ்க்கைச் சித்திரம் திரைப்படமாகத் தயாரிக்கப்படும் என்ற செய்தியை ஆதாரமாக்கி த. ராக வளர்த்திருந்த ‘கமான் ஜெயகாந்தன்! கமான் பாரதி‘ என்ற சிந்தனையும், மற்றும் ‘மதுவிலக்கு‘ எனும் கட்டுரையும் அவரது தனித்த பார்வையையும் சிந்தனை வேகத்தையும் புலப்படுத்தின.

(தேனி ) அல்லிநகரம் பொன் விஜயன் ‘புதிய நம்பிக்கை‘ என்ற மாத இதழைப் பிரசுரித்தார். மிகுந்த சிரமங்களோடு, முற்போக்கு இலக்கியப்