பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

வல்லிக்கண்ணன்


‘சிறுகதை, கவிதை, நாவல், பகுதி, நாடகம் ஆகியவற்றுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. காலப்போக்கில் இங்குள்ள இன்றைய சித்திரக்காரர்களின் சித்திரங்கள், வண்ண ஓவியங்களை வெளியிடுவதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை உள்ளது‘ என்றும்,

‘நமது இலக்கியம் மற்றும் கலைகளில் சிரத்தையுள்ள யாவரும் கூடிச் செய்யும் கூட்டு முயற்சியாகவே இதனைக் கொள்ள வேண்டும். எல்லா சித்தாந்தக்காரர்களுக்குமான பொது மேடையே இது‘ என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

திருவிழாவும் கூத்தும்—ந. முத்துசாமி, தொழில் ரீதி நாடகங்களும் புதிய போக்குகளும்—கோமல் சுவாமிநாதன், சி. சுப்பிரமணிய பாரதியார் கவிதைகள் : ஓர் உள்முகத்தேடல்—ஞானக்கூத்தன், ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்—வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி எழுதிக்கொண்டிருந்த ஜே. ஜே—சில குறிப்புகள் நாவலின் ஒரு பகுதி, குறுக்கீடு—சா. கந்தசாமி கதை, சாவி—லஷ்மி கண்ணன் கதை, மற்றும் கவிதைகள் (காரை சிபி, ஆனந்த், வைத்யா, ஜே. ஆர். ரமணன், அ. யோகராசா— எழுதியவை—10 பக்கங்கள் இவை முதல் இதழின் உள்ளடக்கம்

இரண்டாவது இதழில் வெளிவந்தவை: தமிழ்நாட்டுக் கிராமங்களின் முப்பதாண்டு பொருளாதார வளர்ச்சி (1950-80) உண்மை நிலவரம்—எஸ். ஆர். சத்யா, தெ. பொ. மீனாட்சி சுந்தரன் பற்றி செ. ரவீந்திரன், பாதல் சர்க்கார் நாடகப் பட்டறை சிந்தனைகள்—பிரபஞ்சன், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம் ஓர் அறிமுகம்— ச. வே. சுப்பிரமணியன், ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்னரும்—வெங்கட் சாமிநாதன், மூங்கில் குருத்து—திலீப்குமார் கதை, கழுகு—லா. ச. ராமாமிருதம் கதை, சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் நாவலின் மேலும் சில பக்கங்கள், நகுலன் எழுதிய ‘குகன்‘ கவிதை (100 பக்கங்கள்).

காலாண்டு வெளியீடு பரந்த எல்லைகளில் கவனம் செலுத்த விரும்பியது. இதை மூன்றாவது இதழும் எடுத்துக் காட்டியது.

காரை சிபி எழுதிய ‘புதுவைத் தமிழர் வாழ்க்கையில் பிரெஞ்சு கலாச்சாரத் தாக்கம்‘ என்ற கட்டுரை 15 பக்கங்கள். ந. முத்துசாமியின், ‘அன்று பூட்டிய வண்டி‘ நாடகம் தெருக்கூத்து பற்றிய கட்டுரை, கிராமப் பொருளாதாரம் சம்பந்தமான எஸ். ஆர். என். சத்யா கட்டுரை இரண்டாம் பகுதி மற்றும் சாந்தன், அம்பை, நாஞ்சில்நாடன், சுரேஷ், குமார இந்திரஜித் கதைகள், கலாப்ரியா, நீலமணி, நிமல. விஸ்வநாதன், திரிசடை கவிதைகள்.