பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

வல்லிக்கண்ணன்


இதர பல விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் அது முனைப்புக் கொண்டு விட்டது. அதுவும் பத்து இதழ்களே பிரசுரம் பெற்றது.

புத்தகங்கள் பற்றிய சிந்தனைகள், விமர்சனக் கட்டுரைகள், கவிதைகள் மற்றும் பயனுள்ள விஷயங்களைப் பிரசுரிப்பதற்கென்றே 'நூல் நயம்' என்ற மாத வெளியீடு தோன்றியது.

இலக்கிய சர்ச்சைகள், புத்தக விமர்சனங்கள், நல்ல கவிதைகள், பேட்டிகள் ஆகியவற்றை வெளியிட்டு வந்த 'நூல் நயம்' நம்பிக்கை ஏற்படுத்தும் நல்ல பத்திரிகையாக விளங்கியது. 'அடுத்த இதழில்' சில முக்கிய விஷயங்களை எதிர்பார்க்கும்படி ஆவலைத் துண்டும் பட்டியல் தந்த மூன்றாவது இதழோடு இது ஒடுங்கிவிட்டது.