பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

வல்லிக்கண்ணன்


சில அடிப்படைகளைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் இந்தத் தமிழ்ச் சூழலில் நடந்து கொள்ளும் ஜீவித முறையின் இயல்பான செயல் வடிவ எழுத்து ரூபமே படிகள். எனவே படிகள் எதிர்நோக்க வேண்டிய இடர்களை, இடைஞ்சல்களை முன் யோசனையுடன் சந்திக்கும் திராணியுடன் தான் வெளிவருகிறது.”

இப்படி அறிவித்துக் கொண்டு, 1978 டிசம்பரில், பெங்களூரில் தோன்றியது படிகள்.

ஆழமான சிந்தனைகளை மேற்கொள்ள முன்வந்த காலாண்டு ஏடு ஆன, படிகள் தனக்கெனத் தனித் திட்டம் வகுத்திருந்தது : 1. தமிழின் மொழியியல் விஞ்ஞான அறிவைக் கல்வி நிலையச் சூழ்நிலையிலிருந்து விடுபட வைத்து, அக்கறை கொள்ளும் வாசகர்கள் முன் வைப்பது தேவை. இவ்விஷயத்தில் ஏதாவது செய்ய முடியுமா என்ற சாத்தியப்பாடுகளைத் தேடல்.

2. தமிழ்ப் பாடநூல்களாக மாணவர்கள் மீது திணிக்கப்படும் நூல்கள் மொழி அறிவையோ இலக்கிய அறிவையோ உண்மையில் ஊட்ட வல்லன அல்ல. இப்பாடநூல் தேர்வும் நம் கலாச்சாரச் சீரழிவின் ஒரு குறையீடு. ஆகையால், பாடநூல்களைப் பற்றிய ஆய்வை வெளியிடுதல்முடிந்தால், பிற பல்கலைக்கழக நூல்களுடன் ஒப்பிடும் கட்டுரைகளையும், கல்வி அமைப்பின் குறைகளைப் பாடநூல்களுடன் ஆயும் கட்டுரைகளையும் பிரசுரிப்பது.

3. ஓர் மொழி வளர்வது, வெறும் சொற்கூட்டத்தின் அதிகரிப்பால் மட்டும் அல்ல; சிந்தனையின் அதிகரிப்பாலும் ஆகும். சிந்தனையால் மொழியும், மொழியால் சிந்தனையும் விருத்தி அடைகின்றன என்ற இயக்கவியல் பார்வை கொண்ட படிகள், உலகின் பிற அறிவுத்துறைகளைச் சார்ந்த ஞானம் மட்டுமே நம் அறிவை விசாலமாக்க முடியும் என்று நம்பி, இந்தியச் சூழ்நிலையில் பிற மாநிலங்களில் ஏற்கனவே முக்கியத்துவம் பெற்ற மானுடவியல், சமூகவியல் போன்ற துறைகளில் கட்டுரைகள் பிரத்யேகமாய்ப் போட விரும்புகிறது.

4. தத்துவச் சிந்தனை மீது ஒளி செலுத்த விரும்புகிறது. பிற நாட்டுத் தத்துவ ஆசிரியர்கள் போக்குகள் பற்றி அறிமுகம் செய்யும். தேவைப்பட்டால் விவாதங்கள் வரவேற்றுப் பிரசுரிக்கும்.

5. சிறு பத்திரிகைகள் உதவியால் இலக்கிய உணர்வு ஓரளவு வளர்ந்திருந்தாலும், ஓவியம், சிற்பம், இசை, நாடகம், திரைப்படம்