பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

233


போன்றன பற்றிய சிந்தனை வளரவில்லை. இத்துறைகளிலும் கவனம் செலுத்தப் பெறவேண்டும்.

6. கலைகள், இலக்கியம் போன்ற அடிப்படைகள்—எந்த மனமட்டத்தில் தத்துவம் இங்கு நுழைகிறது, இலக்கிய இயக்கங்கள் பற்றிய அறிமுகங்கள், இலக்கியக் கோட்பாடுகள் தமிழில் இதுவரை வளர்ந்தனவா, ஏன் வளரவில்லை; இனி வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகள் யாவை போன்ற அடிப்படை விஷயங்களிலும் தமிழ்ச் சிந்தனை பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வளவு விஷயங்களையும் செய்யமுடியுமா என்ற மலைப்பு இருந்தாலும், இவ்வளவையும் செய்துவிட்டால் ஏற்படக்கூடிய தமிழ்மொழி வளம், தமிழ்ச் சூழ்நிலையின் ஆரோக்யம் போன்றவை மெய்சிலிர்க்க வைப்பதாயிருக்கும். நம் எண்ணம் வெறும் மொழி வளர்ச்சியுடன் மட்டும் சார்ந்தது அல்ல. மனித வளர்ச்சியுடன் சார்ந்தது. அந்த வளர்ச்சி அறிதலில் அடங்கியுள்ளதுபோலவே அறிதலின் உயர்ந்தபட்ச அறிதலாகிய செயல் முறையிலும் அடங்கியுள்ளது. படிகள் செயல்பாட்டிலிருந்து அகலாதிருக்கும் மனிதனையே படைக்க விரும்புகிறது என்றும் அறிவித்தது.

இன்னுமொரு முக்கிய கருத்தையும் அது வலியுறுத்தியது.

‘வாசகர்கள் கடமை முக்கியமானது. நீங்கள் முதலாளித்துவ பத்திரிகை ஏற்படுத்தி வைத்துள்ள Consumer களாகப் படிகளைப் படிக்க வேண்டியதில்லை. படிகள் தன் இயக்கத்தை ஆசிரியர் குழு—எழுத்தாளர்கள்—வாசகர்கள் என்ற மூன்று பரிமாணங்களின் இணைந்த போக்கில் தான் காண்கிறது. ஒவ்வொரு வரியையும் வாசகர்கள் விமர்சிக்க வேண்டும். அப்படித்தான் படிகளின் பங்குதாரர்களாக முடியும்.’

படிகளுக்குச் சமூகவியல், தத்துவம், தமிழிலக்கியம், மார்க்ஸியம் ஆகிய துறைகளில் ஈடுபாடுள்ள சிலர் ஆசிரியர் குழுவாய் இருந்து ஆலோசனைகளை ஆசிரியருக்கு வழங்கவும், கட்டுரை விமர்சனங்கள், படைப்புக்கள் தேர்ந்தெடுக்கவும் ஒத்துழைப்பதாய்க் கூறியுள்ளனர். இந்தப் பின்பலத்தில் நிற்பது படிகளுக்கு ஓர் பிரத்யேகத் தன்மையைக் கொடுக்கிறது என்றும் கூறிக்கொண்டது.

முதல் இதழில், ’யூரி பரபாஸ்’ என்ற சோவியத் எழுத்தாளரின் ‘எஸ்தெட்டிக்ஸ் அன்ட் பொயட்டிக்ஸ்’ என்ற புத்தகத்தை வைத்து எழுதப் பட்ட சோவியத் அழகியல் எனும் மதிப்புரை கெளதமன் எழுதியது;