பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

239


சோழர் காலச் சமுதாயமும் அரசும்: வேளாளர்களும் பிராமணர்களும் (நூல் அறிமுகம்-பி. எஸ். ஆர். ).

இன்றைய கன்னட இலக்கிய விமர்சனம் : அன்னிய பாதிப்புகளும் சாதனைகளும் (கன்னட மூலம் : கெ. வி. நாராயணன்).

எழுத்து உடையும் காலத்தினூடே—நாகார்ஜுனன்.
க. நா. சு. வுடன் ஒர் உரையாடல்.
படிகள் வெளியிட்டுள்ள முக்கியமான கட்டுரைகள் இவை.

சிந்தனைக் கனம் நிறைந்த—படிக்கிறவர்களைச் சிந்திக்க வைக்கிறவிஷயங்கள்.

இவை தவிர ஈழம் பற்றிய பல கட்டுரைகள், தத்துவம் சம்பந்தமான சில சிந்தனைகள், விவாதங்கள், குறிப்புகளும் உண்டு.

மரபு ரீதியான எண்ணங்கள், போக்குகளிலிருந்து வெளிப்பட்ட சிந்தனைகளையும் பார்வைகளையும் கொண்ட கட்டுரைகளைத் தமிழவன் எழுதியிருக்கிறார். கதையும் கடவுளும், கலாப்ரியாவின் கவித்துவக் குயில் வன்முறையும் பாலுணர்வும் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை. ஜே. ஜே. சில குறிப்புகள் என்ற புதுமையான நாவலுக்குத் தமிழவன் புதுமையான வகையில் விமர்சனமும் எழுதினார். ஸ்ட்ரக்சுரலிச விமர்சனம் என்று குறிப்பிடப்படும் அது உரையாடல் தன்மையில் எழுதப்பட்டிருந்தது.

இந்த விமர்சனத்திற்கு எதிரான குரல்களும் பின்னர் வெளிவந்தன. “எழுத்து உடையும் காலத்தினூடே என்ற தலைப்பில் பிரசுரமான நாகார் ஜூனன் உரையாடல், தமிழவனின் ஸ்ட்ரக்சுரல் விமர்சனம் குறித்தும், சுந்தர ராமசாமியின் நாவல் பற்றியும், மற்றும் இலக்கிய விமர்சனம், எழுத்து முறைகள் போக்குகள் குறித்தும் ஆழ்ந்து சர்ச்சித்துள்ளது.

பல்வேறு புதிய புத்தகங்கள் பற்றிய வேகமான விமர்சனங்களை— சூடான முறையில்—படிகள் வெளியிட்டது.

சிறுகதைகளில் படிகள் நாட்டம் கொள்ளவில்லை. என்றாலும் இரண்டு மூன்று கதைகளை அது பிரசுரித்தது. அவற்றுள் ஒன்று, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்