பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

வல்லிக்கண்ணன்


எழுதிய 'ஒரு செவ்வாய் பகல் தூக்கம்' என்ற கதையின் தமிழாக்கம் ( ஆங்கில வழி தமிழாக்கம்: விசாலாக்ஷி ). இதே கதை வேறு இரண்டு சிறு பத்திரிகைகளிலும் ( வெவ்வேறு எழுத்தாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாயிற்று.

அபூர்வமாக எப்போதாவது கவிதைகளையும் படிகள் வெளியிட்டது. ஜெனகப்பிரியா, ஆத்மாநாம், விக்ரமாதித்தன் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தலித் கவிதைகளின் மொழிபெயர்ப்பும், ஈழக் கவிதைகள் சிலவும் வெளியிடப்பெற்றுள்ளன.

உள்ளும் வெளியும் என்ற பகுதியில் பல பொதுவான விஷயங்கள், பிரச்னைகள், விவகாரங்கள் பற்றியும் படிகள் விறுவிறுப்பான குறிப்புகள் தந்தது. கன்னடப் பாடப் புத்தகங்களும் நவீன ப்ரக்ஞையும், தமிழ்ப் பாடநூல்கள், புதிய நாடக இலக்கியம், சாதிப்போர்வையில் வர்க்கப்போர், ஹரிஜனங்கள் நிலை, வியாபாரக் கலாச்சாரம்—இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் பற்றிய குறிப்புகளை இப்பகுதியில் காண முடியும்.

படிகள் சில தீவிரமான செயல்பாடுகளிலும் முனைந்தது. சிறு பத்திரிகைகளை ஒன்று சேர்த்து 'இலக்கு— கலாச்சார இயக்கம்' ஒன்றை நடத்த முன்வந்தது. வியாபாரக் கலாச்சாரம் பற்றிப் பேசியும் எழுதியும் எதிர்ப்பு காட்டுவதோடு நின்றுவிடாமல், செயல் முறையிலும் எதிர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று இலக்கு திட்டமிட்டது.

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் கோடிக்கணக் கான ரூபாய் செலவு செய்யப்பட்டு ஒரு 'கும்பமேளா' நடத்தப்பட்டபோது, இலக்கு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கள் எதிர்ப்புக் குரலை வெளியிட்டார்கள்.

அது சம்பந்தமாக படிகள் எழுதிய குறிப்பு இது :

‘எழுத்தாளர்கள், புத்திஜீவிகள், கலாச்சாரவாதிகள் எல்லாம் சமூகத்தைப் பாதிக்கும் நிகழ்வுகளின்போது கைகட்டி சும்மா இருக்கக் கூடாது என்று இலக்கு செயல்பாட்டில் இறங்கியது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்திலும் சரி, நாசிகளின் எதிர்ப்பு இயக்கமும் சரி, அதிகமான புத்திஜீவிகளின் ஆதரவு இவ்வியக்கங்களுக்கு இருந்தது. தற்காலத் தமிழகத்தின் வாழ்வுச் சூழலில் புத்திஜீவிகளும் எழுத்தாளர்களும் பொது அக்கறை அற்றவர்களாய் தொடர்ந்தபோது இலக்கு முதன்