பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

வல்லிக்கண்ணன்


தலைவர்களின் சிந்தனைகளை இதழ்தோறும் பிரசுரிக்கிறது. ‘இம்மாதக் சிந்தனை‘ ஒரு முக்கிய அம்சமாகும்.

செய்திகளோடு தொடர்புகொண்ட கருத்துச் சித்திரம் அழகிய முறையில் அட்டைப்படமாக அச்சிடப்பட்டு, உள்ளே ‘அட்டைப்பட விளக்கம்‘ என்று ஒரு ஆய்வுக் கட்டுரை விரிவாகப் பிரசுரம் பெறுகிறது.

காந்தியப் பொருளாதார அடிப்படையில் பல்வேறு தொழில்கள், கைத் தொழில்கள், சிறு தொழில்கள்—அவற்றின் நிலைமை, அவை எதிர் கொள்ளும் பிரச்னைகள்—பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் புள்ளி விவரங்களுடன் ஒவ்வொரு இதழிலும் வெளிவருகின்றன.

இந்த ரீதியில், மீன் பிடிப்புத் தொழில், மீனவர் பிரச்னைகள், கரும்பு விளைவித்தல், சர்க்கரைத் தொழில், அச்சுத் தொழில் போன்ற விஷயங்கள் சில இதழ்களில் ஆராயப்பட்டுள்ளன.

காந்தியப் பொருளாதாரத்துடன் கதர், கிராமக் கைத்தொழில், கிராம மேம்பாடு, இயற்கை மருத்துவம், இலக்கியம், சிறு துணுக்குகள், சுவையான பல தகவல்கள், சிந்தனைக்குரிய விஷயங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் சம்பந்தமான கட்டுரைகளை சர்வோதயம் வெளியிடுகிறது.

நாட்டின் சுதந்திரமும் மக்களின் வாழ்க்கை நலனும் வளமும் பாதுகாக்கப்படவேண்டும். அதற்கு ஒருமைப்பாடும் ஒற்றுமையும் காத்து வளர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். இதை ஆணித்தரமாகக் கூறும் கட்டுரைகள் சர்வோதயத்தில் வருகின்றன.

‘பாரதத்தைக் காத்து பலமடைய, வளமடையச் செய்வதற்கு அண்ணல் காந்தியடிகள் காட்டியுள்ள வழியே சரியானது என்பது நமது உறுதியான நம்பிக்கையாகும். இப்பணி இனி மக்களின் ஆற்றலால்தான் நடைபெற முடியும். மக்களின் சக்தியை ஒன்று திரட்ட கிராமங்கள் தோறும், தெருக்கள்தோறும் சென்று மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். பயிற்சியடைந்த ஊழியர்களின் படை ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும். ஒரு கட்சி அரசு போய் வேறு கட்சியின் அரசு அமைய வேண்டும். ஆட்சிமுறை புதியதாக இருக்க வேண்டும். புதிய சமுதாய அமைப்பு வேண்டும் என்பது மட்டும் போதாது, கீழே இருந்து மேல் மட்டம் வரை ஒரு